பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயக நாயகி சம்பந்தம் 74 (8) திருவரங்கம், பற்றிய திருவாய்மொழியிலுள்ள கங்குலும் பகலும் ( 2) என்ற திருப்பதிகம் தாய்ப் பாசுர மாக நடைபெறுகின்றது. திருவரங்கப்பெருமானிடம் தன் மகள் மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட திருத்தாயார் அரங்கனைப் பார்த்து வினவுவதாக அமைந்தது இத் திருவாய்மொழி. கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் ; கண்ணநீர் கைகளால் இதைக்கும் ; சங்குகக் கரங்கள் என்றுகை கூப்பும் ; தாமரைக் கண்ணன்றே தளரும். எங்கனே தரிக்கேன் உண்னைவிட்டு ? என்னும் இருகிலம் கைதுழன் இருக்கும் செங்கபல் பாய்கீர்த் திருவரங் கத்தாய் ! இவள்திறத்து என்செய் கின்றாயே {1} கங்குல்-இரவு; துயில்.உறக்கம்: கண்ணநீர்-கண்ணிச், தளரும் - சோர்வுறும்; இருதிலம் - அகன்ற பூதலம் திறத்து - விஷயத்தில் என்பது முதல் பாசுரம். ' இரவும் பகலும் உறக்கம் கொள்ளாள். ' கண் துயில் கொள்ளாள் என்னது கண் துயில் அறியாள் என்ற தன் கருத்தை தம்பிள்ளை காட்டியருள்வது: ஸம்ஸ்லேஷத்தில் சேர்ந்திருக்கும்போது: அவன் உறங்க வொட்டான்; விச்லேஷத்தில் (பிரிவில்) விரக வியசனம் உறங்க வொட்டாது. ஆகையாலே இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கமில்லாமையாலே 2 திருவரங்கம் கோயில் என்றும் வழங்குவர். இருப்பூர்தி நிலையம். பல்வேறுபட்ட வசதிக்ள் நிறைந்த தலம். திருச்சியி லிருந்து அடிக்கடி நகரப் பேருந்து வசதிகள் உண்டு. எமபெருமான் அரங்கநாதன், பெரிய பெருமாள். (மூலவன்) உற்சவர் அழகிய மண்வ்ாளன்; தாயார் ; சீரங்கதாச்சியாள் (தனிக்கோயில்). கிடந்த திருக்கோலம் தெற்கு நோக்கிய திருமுக மண்டலம் ,