பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயக-நாயகி சம்பந்தம் 常8 குழலினோசை என் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுகின்றது என்கின்றாள்; திருப்புட்குழி: என்னும் திருப்பதியின் வளத்தை எடுத்துப் பாடுகின்றாள்; திருநீர்மலைக்குப் போக வேண்டும் என்று பயணம் எடுக்கின்றான்; தன்னுடைய விருப்பம் ஒன்றும் நிறைவேறாமையால் கண்ணிரும் கம்பலையுமாகச் சோர்வுறுகின்றான். இப்படிப்பட்ட என் மகள் திறத்தில் செய்ய நினைத்திருப்பது திக்ஏகமோ? அதுக்கமோ? என்கின்றாள். திருத்தாயார் :ாக்கில் தன் மகனின் ஈசுவர பாரதத்திரியமும் உபாத்தில் துணிவும் தொனிக்கின்றதைக் காண முடிகின்றது. 22. திருபுட்குழி- காஞ்சியருகில் உள்ள ஒரு திவ்வி: தேசம். தென்மேற்குத் திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது.இராமன் பெரிய உடையாரின் (சடாயு) திருமேனியை ஒரு குழியிலிட்டுத் தகனம் செய்த இடம். 23. திருர்ேமலை சென்னை - பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவிலுள்ள ஒரு திவ்வியதேசம். சென்னையிலிருந்து பல்லாவரம் வரையில் ழின்-இருப்பூர்தி. பேருந்து வசதிகள் உள்ளன. பல்லாவரத்தில் பேருந்து வசதிகள் உண்டு. சிறியமலை, மலையடிவாரத்தில் ஒரு கோயில் உண்டு. இறைவன்: திருநீர்வண்ணன், நீலமுகில் வண்ணன்; தாயார்: அணிமாமலர் மங்கைத் தாயார். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மிண்டலம். மலைமேல் இரண்டு சந்நிதிகள் உள்ளன. (1) அரங்க தாதன் அரங்கநாயகி. சயனத் திருக்கோலம், தெற்கு நோக்கிய திருமுக மண்டலம், (2) சக்கரவிச்த்தித் திரும்கன், அழகிய சிங்கர் உலகளந்த பெருமாள் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள்னர், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். மலை போகும் வழியில் (1) நின்றான்-நீர்வண்ணன் (ஆடிஆாம்); (2) இருந்தான்-சாந்த நரசிம்மன் (மலைமேல்) {3} கிடந்தான் - அரங்கநாதன் (மலை மேல்); (4) நடந்தான் திரிவிக்கிரமன் (மலை மேல்) என்ற நான்கு நில்ைக்ளில் எம்பெருமான்கள் எழுந்தருளியிருத்த்ல்.