பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. நவவித சம்பந்தம் மகள் பாசுரங்கள்: எல்லோருக்கும் சேவுதியா, சரண்யனாய் அறுதியிடப் பெற்று சித்தோபாயமாய் இருக்கும் எம்பெருமானைத் தாமதித்து அநுபவிக்கக் காரணம் இல்லாமையால் அவளை உடனே பெறவேண்டும் என்ற புதற்றத்தையுடையவள் மகள். இந்தப் பதற்ற நிலையை விணக்குவன மகள் பாசுரங்கள். மகள் பாசுரங்களை ஆழ்ந்து அதுசத்தித்தால் இந்தப் பதற்றநிலை தட்டுப்படும், சிலவற்றைக் காட்டுவேன். (1) திருக்குலுங்குடி பற்றிய 'எங்கனேயோ (5.3} திகுவாய்மொழியில், என்னெஞ்சினால் நோக்கிக் காணிர் என்னை முனியாதே தென்கன் சோலைத் திருக்குறுங்குடி கம்பியைதான் கண்டபின் பின்னு நூலும், குண்டலமும் டிசர்பில் திருமறுவும் மின்னு யூனும் கான்கு தோளும் வந்துளங்கும் கிற்குமே (2) | தெஞ்சால்-தெஞ்சைக் கொண்டு; நோக்கி-அநுபவித்து: முனியாதே-சீறாமல்; மறு-பூஜீவத்சம்) என்பது இரண்டாம் பாசுரம், இஃது உருவெளித்தோற்றத்தில் தலைவனைக் கண்ட தலைவி தாயாரை மறுத்துரைப்பதாக அமைந்த பாசுரம் இதில், 'தங்காய் திருக்குறுங்குடி நம்பியை தி மாத்திரமா கண்டாய்? நாங்களும் பார்த்தோமே, நாங்களும் சேவித்திருக்கின்றோம். ஆயின, உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது' என்று தாயார் சொல்ல. அதற்குத் தலை மகன், ' என் நெஞ்சினால் நோக்கிக் காணிர் என்கின்றாள். என் நெஞ்சினை இரவலாக வாங்கி வைத்துக் கொண்டு திங்கள் தம்பியை சேவித்தீர்களாகில் இவ்வாறு என்னைப் பொடியமாட்டிர்கள்’ என்கின்றாள்,