பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器懿 - - - - நவவித சம்பந்தம் என்பதற்குப் பொருள் ' ஆன்மா " என்றும், ត្រៃសក្រៅ உடலினின்தும் வேறுபட்டது என்றும் கூறுவதை விளக்க வேண்டும், 1. பிற நாட்டான் ஒருவன் பத்து ஆண்டுகட்கு முன்னர் நம் தாட்டிற்கு வந்தபோது திருவரங்கத்திலுள்ள அரங்க விமானத்தைக் காண்கின்றான். அந்த மனிதனே இன்று இங்கு வத்து முன்பு தான் கண்ட அரங்க விமானத்தை நோக்கி, இது யான் முன்னர் பார்த்த ஒன்றே; இது முன் னிருத்தபடியே இன்றும் உள்ளது ' என அறிகின்றான். உடலே கனத்திற்குக் கணம் மாறுபடும் பொருளாய் உள்ளது எனச் சாத்திரங்கள் சாற்றுகின்றன. இதனை நாம் அதுபவத் தாலும் இன்று மருத்துவ முறையினாலும் அறிகின்றோம். இம்முறையில் பத்து ஆண்டுகட்கு முன்பு இருந்த உடலே இன்று உள்ளது என்று சொல்ல முடியுமா ? அங்கனமாயின், இது நாம் பத்து ஆண்டுகட்கு முன் பார்த்த பொருள் என அறிதற்கு அன்றும் இன்றும் மாறுபடாது ஒரே நிலையில் இருக்கும் பொருள் ஒன்று இருந்தே தீரவேண்டுமன்றோ? ஆதலின் இந்த அறிவு உடலின் வேறுபட்ட அறிவுடைய ஆன்காவிற்கே அமையும் என்பதும், அந்த ஆன்மா உடலைக் காட்டிலும் வேறுபட்டது என்பதும் தெரிகின்றன அல்லவா ? 2. இன்னும், நேற்றுக் கண் பார்த்த ஒன்றையே இன்று கை தொடுகின்றது. இவ்வாறு ஒரு கரணத்தால் பார்த்தல் மற்றொரு கரணத்தால் தொடுதல் என்பது அறிவுள்ளதும் என்றும் உள்ளதுமான ஒரே பொருளினால் நிகழுமேயன்றி அறிவற்றதும் அப்போதைக்கப்போது மாறுந்தன்மையுடையது மான சில பொருள்களினால் நிகழாதென்பது அநுபவசித்தம், ஆதலின் அறிவற்ற சடப் பொருளாகிய உடலினால் இவை தடைபெறாதென்றும், இவற்றை நிகழ்த்துவதற்கு உடலைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு பொருள் இருத்தல் வேண்டும் என்றும், அஃதே ஆன்மா என்றும் அறிகின்றோம்.