பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சுவம்-சுவாமி சம்பந்தம் திருமந்திரத்தின் தடுப்பதமான 'தம: என்பதால் இந்தச் சம்பந்தம் (ஸ்வ-ஸ்வாமி) சொல்லப் பெறு கின்றது. இதைச்சொத்து - சொத்துக்குரியவன் (சொம் . சோத்து உடைமை உடையவன்) உறவு என்றும் கூறலாம். இந்த உலகில் புெகளையுடையவன் அதனைத் தன் இருப்பப்படி அதுபவிப்பதும், பெட்டியில் வைத்துப் பேணு அதும் பிறருக்கு உதவுவதுமாக எப்படிச் சுதந்திரமாகப் பயன்படுத்துகின்றானோ அப்படியே பரமான்மாவும் இந்தச் தீவான்மாவைச் கதந்திரமாக வைக்கவும், தள்ளவும், எடுக்க வும் உரியவனாகின்றான். சீவான்மாவும் அப்பொருளைப் போலவே தனக்கு எந்தவித சுதந்திரமுமின்றிப் பரமான்மா தின் விருப்பத்திற்கே அவனது அநுபவிக்கும் பொருளாகக் அ.மைப்பட்டு வாழ்பவனாக அமைகின்றான். மகாசம் வடமொழியில் இருபத்தைந்தாம் எழுத்து. இது ஞானத்தைக் குறிக்கும் சொல். ஆதலால் இஃது ஆன்மாவைச் சொல்லுகின்றது. மகாசம் இருபத்தைந்தாம் எழுத்து என்பது எப்படி? வடமொழியில் க இனம் ஐந்து: ட இனம் ஐந்து: த இனம் ஐந்து: ப இனம் ஐந்து. இந்த ஐந்து இனங்களிலும் இருபத்தைந்து எழுத்துகள் உள்ளன. இவற்றுள் பகர இனத்திற்கு இறுதியாகவுள்ள (இருபத்தைந்தாவதாகவுள்ள எழுத்து) மகாரம் ஆகும்,