பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘镑馨 - நவவித சம்பந்தம் வகையும் எம்பெருமான் திருமேனியில் அடங்கியிருக்கும். அதாவது, சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக இருக்கும். இதுதான் 'சtர-சரீரி பாவனை என்று வழங்கப் பெறுகின்றது. இந்தக் கருத்தை இவ்விடத்தில் விரிவாக விளக்குவோம். விளக்கம் : உயிர் உடலிலிருந்து அதனைத் தரிக்கச் செய்கின்றது. உயிரின்றேல் உடல் வீழ்ந்து விடுதல் கண் க.டு. மேலும், உயிர்தான் உடலை இயக்குகின்றது. உயிர் உடலுக்குத் தலைவனாக உள்ளது. அங்ங்னமே இறைவன் எல்லாப் பொருள்களில் இருந்து அவற்றைத் தன் விருப்பும் போல் நடத்தி அவற்றிற்குத் தலைவனாகவும் இருக்கின்றான். ஆயினும், உடலினுள் உயிர் இருப்பதற்கும் எல்லாப் பொருள் கனிலும் இறைவன் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. உயிர் அனு:அளவினதாய் உடம்பினுள் ஒரிடத்திலிருந்து கொண்டு தன் ஞானத்தால் (தர்மபூத ஞானத்தால்) உடல் முழுவதும் பரவி இவ்வுடம்பைப்பற்றிய நிகழ்ச்சிகளை உணர்த்துகின்றது. இறைவன் அங்ஙனமின்றி ஒவ்வொரு பொருளுள்ளும் முழுவதும் தின் சொரூபத்தோடு வியாபித்துள்ளான். அன்றியும், உடலினுள் உயிர் இருப்பதற்கும் உடல் உயிர் ஆகிய இரண்டினுள் இறைவன் இருப்பதற்கும் மற்றொரு வேறுபாடும் உண்டு. உயிர் உடலினுள் இருக்கும் போது அவ்வுடலுக்குறிய வளர்ச்சி தேய்வுகள் (விகாரங்கள்) உயிருக்கு உண்டாவதில்லை. ஆனால் உடலைப் பற்றிய இன்ப துன்ப உணர்ச்சிகள் அறிவின் சுருக்கம், பெருக்கம் ஆகியவை உயிருக்கு உண்டு, உடலின் மீது தண்ணிய காற்று 2. சுத்த சத்துவம், மிச்ச தத்துவம், சத்துவ சூனியம் என்பவை. சுத்த சத்துவம் - நித்திய விபூதியிலுள்ள விமானம், கோபுரம், மண்டபம், உப்பரிக்கை முதலிய வடி வுடன் தோற்றம் கொள்ளுபவை: மிச் தத்துவம் - மூலப் பிரகிருதி, இஃது அவித்யை மாயை, திரிகுண்ம் என்ற பெயர் களாலும் வழங்கப்பெறும். எ.டு. அண்டங்கள். சத்துவ சூனியம் - இது கால தத்துவம்.