பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரீர-அசீசி பாவனை 慧泰 i வீசுங்கால் இன்புறுதலும், தீ சுடுங்கால் துன்புறுதலும் உடலினுள் இருக்கும் உயிருக்கு நேரிடுகின்றன. இனி, குழந்தைப் பருவத்தில் அதனுள் இருக்கும் உயிரின் அறிவு சுருங்கிய நிலையிலிருந்து பின்பு வளர்ச்சியுறுதலைக் காண் கின்றோம். மத்தும். மக்கள் உடம்பினுள் உன்ன உயிர் ஐம்பொறி அறிவும் உடையதாக உன்னது. அவ்வுயிரே மரம் எறும்பு முதலிய உடல்களில் புகுத்தால் ஐம்:ெசறிவறிவு மின்றிச் சில குறையவும் பெறுகின்றன. இனி உயிர் பரு உடலைப் பெறாத நிலையில் அறிவு சுருங்கியிருத்தலும், அறிவு விசித்திருத்தலும் உண்டு. இங்கனமாக உடலைப் பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக் கேற்ப இன்ப துன்: உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டிலுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை. இதற்குக் காரணம் 'பிரவேச ஹேது விசேடம் என்பச் மெய்விளக்க அறிஞர்கள். ஆன்மா உடலினுள் கர்மம் அடியாகப் பிரவேசிக்கின்றது. இறைவன் இவ்விரண்டினுள் :உடல், உயிர்) திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக் கூடத்தில் சிறையனும் கிடந்தான்; அரச குமாரனும் இருந்தான். சிறையன் கர்மம் அடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று, அரச குமாரன் இச்சையால் பிரவேசித்ததால் போகரூபமாக இருந்தது. இந்த எடுத்துக் காட்டால் இக்கூறிய கருத்தைத் தெளியலாம்." ஆவார் பாசுரங்கள்: சேததமும் (சித்து) அசேதனமும் இறைவனின் திருமேனியாக அமைந்துள்ளன என்பதை, ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலம் எடுத்துக் காட்டி விளக்க முயல்வேன். 3. ஈட்டின் தமிழாக்கம்.திருவாய் 3.4:10 காண்க.