பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量翰驾 நவவித சம்பந்தம் இகவசதுக்கு அடிமையாகவுள்ள (சேஷமாகவுள்ள) ஆன்மா ஆன்மாவை விட்டுப் பிரிந்திராத உடலைப்போல் ஆண்டானான சேஷியான) ஈசுவரனை ஒழியவும் தான் வேறாகக் காணப் பெறுதல் இல்லை. இந்த முறையில் ஒவ்வொர் ஆன்மாவும் ஈசுவரனின் உடலாக இருக்கும். இங்கணமே, அசித்தின் மூன்று பகுதிகளும் ஈசுவரனுக்கு உடலாகத் திகழ்கின்றன. அதாவது சேதநா சேதநங்கள் எம்பெருமானின் சரீரமாக அமைத்துள்ளன. இது, திடவிசும்பு எரிவளி நீங்கிலம் இவையிசைப் படர் பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரக்தெங்கும் பரந்துளன்." ! விசும்பு ஆகாயம் எரி-நெருப்பு: வளி-வாயு படர் பொருள்படர்ந்த பொருள்; அவை அவைதொறும். அப் பொருள்கள் எல்லாவற்றிலும் கரந்து-மறைந்து | என்ற தம்மாழ்வார் பாசுரத்தில் விளக்கம் அடைகின்றது. உலகிலுள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறையு மசப் போலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருப்பான் இறைவன். நம்முடைய உடலுக்கு ஆன்மாதான் தாரகமாய், நியாமகனாய், சேஷியாய் இருப்பது போல, உடல் ஆன்மாக்களுக்கு எம்பெருமான் தான் தாரகமாய் நியாமகனாய், சேஷியாய் இருப்பான். 'கரந்து' என்பதனால் ஒருவருக்குத் தெரியாமல் மறைந்து அந்தர்யாமியாய் இருப்பான் என்பதும், 'எங்கும் பரந்து' என்பதனால் உள்ளும் புறமும் வியாபித்து இருப்பான் என்பதும் பெறப்படுகின்றன. இதே கருத்து, திருவாய் 1.1