பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

îፅፏ நவவித சம்பந்தம் இத்திகுவாய்மொழியின் (8.8) முதற் பாசுரத்தின் முடிவில் ஒருவன் அடியேன் உள்ளானே' என்று உள்ளது. இப்படி பல விடங்களிலுமுள்ள அடியேன்” என்ற சொல்லுக்கும் இப்பாசு ஏத்திலுள்ள 18.8 :2) சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அடிவேன்' என்ற சொல் பல விடங்களில் வந்தாலும் அவ்விடங்களிலெல்லாம் உடலோடு கூடினவனான (தேக விசிஷ்டனான ஆன்மாவே அடியேன் என்ற சொல்லுக்குப் பொருளாகும். ‘அடியேன் செய்யும் விண்ணப்பம் (திருவிருத்.1) என்ற தொடரை எடுத்துக் கொள்வோம். உடலின்றி ஆன்மா மட்டிலும் விண்ணப்பம் செய்ய முடியாதல்லவா? உடலுடன் கூடிய ஆன்மாவே விண்ணப்பம் செய்ய முடியுமாதலால் இங்குத் தனியாக ஆன்மாவைப் பொருளாகக் கொள்ள முடியாது. எல்லா இடங்களிலும் இப்படியே கொள்ளவேண்டும். அடியேன் சிறிய ஞானத்தன் (1.5:7) என்ற தொடரில் ஆசனத்தன்' என்று ஞானமுடைமை சொல்லியிருப்பதனால் அஃது உடலுக்கு சம்பந்தமில்லை என்றும், ஆன்மாவுக்கே சம்பந்தம் என்றும் கொண்டு அடியேன்” என்பது வெறும் ஆன்மாவையே சொல்லியாக வேண்டும் என்ற மயக்கம் தோன்றுவது இயல்பு. ஆனால் அஃது உண்மையன்று. அங்கும் உடலோடு கூடிய ஆன்மாவையே குறிக்கின்றது. ஏனெனில் பாசுரத்தின் இறுதியிலுள்ள காண்பான் அவற்றுவன்’ என்னும் செயலில் அச்சொல் பொருந்த வேண்டியுள்ளது. வெறும் ஆன்மா அலற்ற முடியாதாகையால் அந்த இடத்திலும் உடலோடு கூடிய ஆன்மாவையே குறிக்கின்றது என்பது உறுதியாகின்றது. ஒருவன் அடியேன் உள்ளானே’ (8.8: 1) என்று வரும் இடத்தையும் நோக்குவோம். இங்கு ஒருவன் ஒப்பற்றவன். தாமரைக் கண்ணனாய் மழை முகில் போன்ற நிறத்தை யுடையவனாய் நான்கு தோளனாய், திருவாழி, திருச்சங்கு முதலான திவ்விய ஆயுதங்களைத் தரித்தவனாகையாலே