பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஜீது.சரீ சன்னை # (.5 ஒப்பற்றவனாகின்றான் இறைவன், அடியேன்.அவனுடைய இறைமைத் தன் மே ஒப்பற்றதாய் இருப்பது போன்று. இவரது அடிமைத் தன்மையும் ஒப்பந்தது. ஆன்மாவின் சொரூப் ஞானத்தால் அன்றி எம்பெருமான் அழகுக்குத் தோற்று "அடியேன்” என்கின்றனர் என்றும் கொள்ளலாம் உள் ை னே புறத்திலே திரியும் மனத்தினை உள்முகம் ஆக்கினவாறே அவனுடைய வடிவழகு வயிரப் பேழை திறந்தாற் போலே அவயவசோபையும் ஆயுதசோபையும், ஆபரணசோ:ைபும் 18. కొని త్రి ఉ3 మి. ఖెత్రా L3ఖr@ ఈ జా ஆன்மாவையே சொல்லி நிற்பது உறுதிவாகின்றது. "அடியேன் உள்ளான் உடல் உள்:ான்' என்னும் இத் தொடரில் மட்டிலும் 'அடியேன்” என் த சொல் வெறும் ஆன்மா வைகே குறிக்கின்றது என்று கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆன்மா சிறப்பாகக் குடி கொண்டிருக்கும் உடம்பைக் குறிக்கும் உடல் என்ற சொல் தனிப்பட இருப்பதால், ‘அடியேன்” என்ற சொல்லில் உடலைச் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எம்பெருமான் சீவான்மாவையும் உடல் பொருளையும் அத்தர்யாமியாய் ஊடுருவி நிற்பவன் என்று சொல்லவேண்டுவது இங்கு அவசிய மாகின்றது. உடல் உள்ளான்' என்பதனால் சடப் பொருளை ஊடுருவியுள்ளவன் என்று சொல்லி முடிந்தது. சீவான்மா வையும் ஊடுருவியுள்ளான் என்பதைச் சொல்ல விரும்பியே * அடியேன் உள்ளான் ' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆன்மா " நான் என்ற பொருளையுடையதாகையால் ‘என்னுள்ளான்” என்று சொல்லியிருக்கலாம். அப்போதும் 'ஆன்மாவில் உள்ளான்' என்னும் பொருள் தேறிவிடும். ஆனால், ஆழ்வார் அப்படி அருளிச் செய்யாமல் அடியேன் உள்ளான்” என்று அருளிச் செய்திருப்பதனால், ஆன்மா” என்பதும் அடியேன்” என்பதும் ஒரே பொருள்தான் என்பதாக அறுதியிடப் பெறுகின்றது. ஆக, 'அடியேன் உள்ளான். என்றது ஆழ்வானது ஆன்மாவில் வியாபித்துள்ளான் என்பதைக் குறிப்பிட்டவாறாகின்றது. ' உடல் உள்ளான்