பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意慧媛 தவவித சம்பந்தம் உ.ல், உயிர் இவ்விரண்டினுள்ளும் கலந்து நிற்கும் |றைவனை ஏந்த வேறுபாடுகளும் அடைவதில்லை என்தை மேலே குறிப்பிட்டோம். இக்கருத்தினையே ஆழ்வார், புலனொடு புலன் அலன் : என்று சுருக்கமாக உரைத்துள்ளதைக் காணலாம். பிறிதோ சிடத்தில் இதனையே. Aாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன்ஜக் துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவிசேல் உயிரின் உள்ளால் ஆதுமேனர் பற்துஇலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட. லாமே." 'யாவையும் அசேததப் பொருளாய்; எவரும்-சேதநர் களாய், சமயம்-நிலை; தோய்வு-கலப்பு: உணர்வின் மூர்த்தி-ஞானம் சொரூபமாக இருப்பவன்; ஆவிசேர் உயிர்-உடம்பினைப் பொருந்திய ஆன்மா, பற்று. சம்பந்தம்; பாவனை-எண்ணம்; என்று விரிவாகவிளக்கியுள்ளார்.அவர் உயர்திணை அஃறிணை பாகிய எல்லாப் பொருளுள்ளும் இறைவன் கலந்து நின்று அவற்றின் அவத்தைகள் தன்னைத் தொடராதபடி இருக் கின்றான். உடலிலுள்ள உயிர் அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய்வு தரை திரை முதலிய விகாரங்களை அடைவதில்லை. என்பதை தாம் உணர்வோமாயின் அவ்வுடல் உயிர் இரண்டின் விகாரங்களும் இறைவனை அடைவதில்லை என்பதையும் உணரலாம் என்பது இராமாநுசர் அருளிய விளக்கம் ஆகும். 16. திருவாய், .

3 17. திருவாய், 3.4:10