பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆதார-ஆதேய சம்பந்தம் இந்த சம்பந்தம் திருமந்திரத்தின் மூன்றாவது பதமாகிய நாராயண' என்பதிலுள்ள அயன என்பதால் தெரிவிக்கப் பெறுகின்றது. ஆதாரமாவது பரமான்மா தன்னை (சீவான்மார்விட்டு நீங்காமல், என்றும் தன்னையே ஆச்சயித்து கொண்டிருக்கும் சித்து, அசித்து முதலிய அகிலம் (Universe) அனைத்திற்கும் இடங் கொடுத்து நிலைத்து நிற்கும்படி செய்வதாக அமைந்திருப்பது. ஆதலால் அந்தப் பரமான்மா ஆதாரம் என்று சொல்லப்பெறும். ஆதாரம்-தாங்குவது. ஆதேயமாவது . சீவான்மா தனக்கு ஆதாரமாயிருக்கும் பரமான்மாவைப் பற்றி நிற்பது ஆதேயம்-தாங்கப் பெறுவது ஆகவே,இந்தச் சம்பந்தம் தாங்குவது-தாங்கப்பெறுவது என்ற உறவாகின்றது. இது திருமந்திரத்தால் பெறப்படும் எட்டாவது சம்பந்தமாகும். ஆழ்வார் பெருமக்களின் பாசுரங்களினால் இந்தச் சம்பந்தம் அறியப்பெறும்.