பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதாகஆதேவ சம்பந்தம் 117

  • தம்முடைய அருளை வாரிடத்துப் பயன்படுத்தலாம்! . என்து நீ தயை பெற உரியாரைத் தேடிக் கொண்டிருக் கின்றாய். தமக்கு எம்பெருமாள் அருள்புரிவானோ? என்று தான் உன் தகைவைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்" என்கின்றார். ஆகவே, நின்னருள் என்:ாலதே யாகும். * நீ எனக்கு ஆதாரம்; தான் உனக்கு ஆதேயம் - இது தானே உண்மை? " என்கின்றார் ஆழ்வார்.

இந்த அடிகட்கு வேது விதமாகவும் பொருள் கொன்ன லாம். நாராயணனே உன்னை அறுதியிட வேண்டுகாவின் என்னை அறுதியிட வேண்டும்; என்னை அறுதியிட வேண்டு மாயின் உன்னைக் கொண்டு அதுதியிட வேண்டும்’ என்கின்றார். அதாவது தாராயணன் என்றால் நாசங் களுக்கு அயனம் என்றபடி, நாபதாச்த்தங்களில் தாம் சேர்ந்தவனாகையாலே தம்மைக் கொண்டு நாராவணனை அறுதியிட வேண்டியதாகின்றது. தம்மை அதுதியிட வேண்டு மானால் இறைவனைச் சேர்ந்தவன் (ஆதேயம்) என்று அறுதியிட வேண்டியிருப்பதனால் தாராயணனைக் கொண்டு தம்மை அறுதியிட வேண்டியதாகின்றது. இவற்றால் ஆதார. ஆதேய உறவு தெளிவாகின்றது. குலசேகரப்பெருமாளின் வித்துவக் கோட்டம்மான் திருப்பதிகத்தில், (3) வெங்கண்திண் களிறுஅடர்த்தாய்! விற்றுவக்கோட் டம்மானே! எங்குப்போய் உய்கேன், உன்இணையடியே அடையல்அல்லால் எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும் வங்கத்தின் கூம்புஎறும் டிாப்பறவை போன்றேனே. (5)