பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 & நவவித சம்பந்தம் ! வெங்கண் பயங்கரமான கண்களையுடைய, திண் களிறு வலிய யானை: அடர்த்தாய் - கொன்றவனே: அடையல் - சாண் அடைதல்; அல்லால் - அல்லாமல்; உய்வேன் . பிழைப்பேன்; எறி - அலை எறிகின்ற; எங்கும் . நான்கு திக்கிலும்; மீண்டு திரும்பி வந்து; வங்கம் - மாக்கலம், கூம்பு பாய்மரம்: மா.:றவை . பெரிய கட்சி ! மாக்கடலில் ஒரு கப்பல் புறப்படுகின்றது. அக்கப்பலின் பாய்மரத்தின்மீது ஒரு பறவை உள்ளது. கப்பல் நடுக் கடலுக்குச் சென்றவுடன் பறவை பறக்கத் தொடங்குகின்றது. தினத்தினின் தும் கப்பல் மிகச் சேய்மையில்வந்து விட்டமையால் பறவையால் மீண்டும் நிலத்திற்குச் செல்ல முடியவில்லை, கடலிலே பதவை சென்று தங்குவதற்கு ஏற்ற இடமும் இல்லை. ஆகவே, பறவை மீண்டும் கப்பலின் பாய்மரத்திற்கே வந்து சேர்கின்றது. வாழ்க்கையாகிய கடலில் உள்ள நாமும் இறைவனாகிய கப்பலின் பாய்மரத்தின் மீதுள்ள பறவையின் திலையில்தானே உள்ளோம். எப்படி எப்படிப் பறந்தாலும் இறுதியில் இறைவனைத் தானே வந்தடைதல் வேண்டும் மரக்கலத்தின் நிலையில் எம்பெருமானையும் (ஆதாரம் பறவையின் நிலையில் நம்மையும் (ஆதேயம்) கூறியதனால் சீவான்மாவுக்குப் பரமான்மாவேயின்றி வேறு புகல், அமையாது என்பதும், பரமான்மா சீவான்மாவுக்கு ஆதாரம் மாதலும், சீவான்மா பரமான்மாவுக்கு ஆதேயம் ஆதலும் தெளிவாகின்றன. ஆதார ஆதேய உறவு இதனால் விளக்கப் பெற்றது.