பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. போக்தா-போக்கிய திருமந்திரத்தால் பெறப்படும் ஒன்பதாவது சம்பந்தம் இது 'நாராயணாய என்பதிலுள்ள ஆய மதத்தால் 'போக்தாபோக்கிய என்ற இந்த சம்பந்தம் அமைகின்றது. போக்கியப் பொருளை எவன் ஒருவன் தன் விருப்பப்படி அதுபவிக்கின்றானோ அவன் போக்தா, அதுபவிக்கும் பொசூன் போக்கியம் ஆகின்றது. ஈண்டு ஈசுவரன் போகத்தை அநுபவிப்பவன்; ஆன்மா ஈசுவரனுக்கு யோகப் பொருளாய் இருக்கிறது. ஆகவே இது போக்தா-போக்கிய உறவாகினறது. ஈசுவர இலாபம் சேததனுக்குக் குறிக்கோளா? சேதத் இலாபம் ஈசுவரனுக்குக் குறிக்கோளா?’ என்ற ஆராய்ச்சி வைணவ பக்தர்களிடையே நடைபெறுவது உண்டு. சேதத இதாயந்தான் ஈசுவரனுக்குக் குறிக்கோள் என்பதுவே வைணவ: சித்தாந்தம். எம்பெருமான் தன் படைப்பினாலும் அவதாரங் களினாலும் ஆன்மப் பயிர்த் தொழில் கிடைப்பதெல்லாம் ஓர் ஆருயிர் தனக்குக் கிடைக்கும் என்ற தப்பாசையினாலன்றோ? 'எல்லாம் வாசுதேவன்" என்ற திருவுள்ளம் கொண்டுள்ள ஒரு மகாத்மா எனக்குக் கிடைக்கவில்லையே' என்றன்றே: