பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நவவித சம்பந்தம் அறிகிைேன் தன்னுள் சிறியனன் ஆருயிர் உண்ட திருவருளே." என்ற பாசுரத்தின் ஈட்டில் "பகைவர்களை அம்பாலேஅழிக்கும். அடியார்களை குணத்தாலே அழிக்கும் ......... அம்புப்பட்ட புண்ணை மருந்திட்டு ஆற்றலாம். குணத்தால் வந்த புண்ணுக்கு மாந்து இல்லை ' என்ற உரைப்பகுதி சிந்தித்து அதுபவிக்கத் தக்கது. இவ்விடத்தில் முமுட்கப்படியின், " அதாவது போசுதிசையில் ஈசுவரன் அழிக்கும்போது கோக்க வேணும் என்று அழியாதொழிகை' என்ற மகா வாக்கியத்தின் கருத்தும் சிந்திக்கற்பாலது. அஃதாவது, ஈசுவரன், சீவனாகிய தன்னோடு கலந்து பரிமாறும்போது அவன், தன் மாட்டுக் கொண்டுள்ள பிரேமப் பித்தினால் தாழ நின்று பரிமாறி, தன்னுடைய சேஷத் துவத்தை அழிக்குங்கால் நம் சேஷத்துவத்தை நோக்கிக் கேரன்ன வேண்டும் ' என நினைத்துச் சீவனாகிய தான் பின் வாங்கி அவன் போகத்தைக் கெடுக்காமலிருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இதுதான் பகவானுக்கே ஆனந்தம் ஏற்படுமாறு வினியோகிக்கப்படுகை எனச்சொல்லப் படுவது. ஈசுவரன் சேததனை (உயிரை) வினியோகம் செய்து கொள்ளல் இரண்டு வகைப்படும். இவற்றுள் அவன் தலைவனாகவே இருந்து உயிரை அடிமையாக வைத்துப் பரிமாறுதல் ஒருவகை. சேதநன் இறைவனுக்கு செய்யும் கைங்கரியம் எல்லாம் இதன்பாற்படும். சில சமயம் அவன் உயிருடன் கலந்து போகம் துய்க்கக் கருதுவான். அவ்வமயம் 5. திருவி 9.5:4 10. முமுட்சு-92