பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவவித சம்பந்தம் பழியில்பல் உபசா ரங்கள் பண்ணவும் தெரியா னாகி ஒழிவுறு தவக்கு சேலன் ஒன்றும்பே சாதி ருக்தான்." என்ற பாடலில் காணலாம். தம்மை அடிமை கொள்பவனைப் போன்று தம்மிடம் கிட்டித் தாழ நின்றுத் தம் ஆன்மாவை முற்றும் கவர்ந்து கொண்ட ஆச்சரியமான சேஷ்டிதங்களை {செயல்கனை) யுடையவன் ஈசுவரன் என்பதை ஆழ்வாரும், ஆட்கொள்வான் ஒத்துஎன் உயிர்உண்ட மாயன்." எனத் தெரிவிக்கின்றார். இதனால் ஈசுவரன் உயிரைத் தனக் கெனவே வினியோகம் கொண்டுள்ளான் என்பதை அறிகின்றோம். எம்பெருமானை அதுபவிக்கும் ஆழ்வாருக்கு 'எப்பொழுது தாள் திங்கன் ஆண்டு ஊழிதோறும் அப்போதைக்கு அப் பொழுது என் ஆரா அமுதமே' என்னும்படி நாள்தோறும் அரிதாகத் தோன்றுமாப் போலே, எம்பெருமானுக்கும் ஆழ்வா குடைய அதுபவம் நாள்தோறும் அரிதாகவே தோன்று கின்றது. எனவே அவன், கோளுண்டான் அன்றிவந்து என்னுயிர் தானுண்டான் கtளும்:5ாள் வந்தேன்னை முற்றவும் தானுண்டான்." ஒருநாள் அதுபவித்து ' இனி இது நாம் அநுபவித்தது அன்றோ?' என்று கைவாங்கியிராமல் நாள்தோறும் வந்து ஆழ்வாரை அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதமாக அநுபவித்தான். இங்கே நம்பிள்ளை, "அனுப்பரிமாண மான _iয়সে রক 13. திருவாய். 9.6:? 14. டி. 2.5:4 15. டிெ. 9.6:8