பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்தா.போக்கிய சம்பந்தம் 盖签数 தவனுக்கு வலுவிலே கிடைத்தலும் இறைவனது சங்கல்பம் என்பது ஈண்டு அறியத்தக்கது. அதுபோலவே நீ உன் உடைமையாகிய என்னை விரும்பாதிருக்க விரும்பாதிருக்க: நான் உன்னையே விடாது நிற்யேன்" என்பது கருத்து, "தின்னையே தான் வேண்டி’ என்று இரு முறை வந்திருப்பது 'வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் திருவாய். 3.8:10) என்ற விடத்து நம்மாழ்வான் போக்தாவாக ஆசைப் பட்டபடியே இவரும் அவ்வாறே ஆசைப்படுவதைக் காட்டு கின்றது. இதனால் சீவான்ம பரமான்மாவின் உடைமை யாதலால் அவன் தன் பொருளை எப்படி விரும்பினாலும் ஆதுபவிக்கலாம் என்பதை உணர்த்துகின்றது. செல்வத்துக்கு உரிய இடத்தில் எம்பெருமானையும், செல்வத்தின் இடத்தில் தம்மையும் வைத்துக் கூறியதனால், சீவான்மா பரமான்மாவின் உடைமை என்பது புலப்படும், உடையவன் உடைமை என்ற உறவும் புலப்படுவதாக உரைப்பர் பிரதிவசதி பயங்கரம் அண்ணங்கராசசரிது சுவாமிகள்,ே ஆக, இந்த நவவித சம்பந்த ஞானத்தால் எல்லாவித ஐயங்களும் அற்றநிலை ஏற்படுவதால் ஆன்மா ஆனந்த சுப வ நிலையை அடையும். அடையவே, பரமான்மா சொகுப நிலையில் ஆழங்கால்பட்டு எம்பெருமான் திருவடி நீழல்ை அiை-தது .: b. 23. பெரு. திரு. திவ்வியார்த்த தீபிகை-பக். 31.