பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

觀 1. நவவித சம்பந்தம் சீம்பக்த ஞானம் : நவவித சம்பந்தத்தை விளக்கத் தொடங்குவதற்குமுன் சம்பந்த ஞானம்பற்றித் தெளிவு வேண்டுகாதலால் அதனை முதலில் விளக்குவேன். எம்பெருமானாகிய சர்வேசுவரனுக்கும் ஆன்மகோடி கலாகிய நமக்கும் உள்ள உறவு முறையைத் அறிவதைச் * சம்பந்த ஞானம் எனறு கூறுவர். இந்தச் சம்பந்த ஞானம் இல்லாத காரணத்தால் நாம் சர்வேசுவரனை விட்டுப் பிரிந்து பிறவிப் பெருங்கடலில் ஆழ்ந்து நீந்தமுடியாமல் ஆத்யாத்மிகம் ஆதிபெதிைகம் ஆதிதைவிகம் என்ற மூவகைத் துன்பங் களால் உழன்று கொண்டிருக்கின்றோம். இவ்வகைத் 1. ஆத்யாத்மிகம் நம் உடலையும் மனத்தையும் பற்றி வரும் துன்பங்கள். இது சரீர ஆத்யர்த்மீகம், மன ஆத்யாத் மிகம் என இருவகைப்படும். முன்னது உடலைப் பற்றிக் கொண்டு வரும் தலைவலி, காய்ச்சல், குட்டம், இருமல் முதலிய பிணிகள். பின்னது காமம், குரோதம், பொறாமை முதலிய குணங்கள். 2. ஆதிபெளதிகம்-பிசாசம், தீய பிராணிகள், மனிதர், இராக்கதர் முதலியவர்களால் நேரிடும் துன்பங்கள். 3. ஆதிதைவிகம் - காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலியவற்றால் தெய்வ சங்கற்பமாய் உண்டாகும் துன்பங்கள்.