பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவகித சம்பத்தம் 5 அத்தச் சம்பத்துக்குள் இாமும் அடங்கினோம் என்து அதுசத் தித்துக்கொண்டு கைங்களியம்: செய்ய வேண்டும் " என்பது பாசுரத்தின் பொருள். எம்பெருமானது விபூதிக்குள்ளே தானும் ஒருவனாக அடங்கப் பார்க்கவேண்டும். அதற்கு வெளிப்பட்டு ஆட்டம் போட்டால் விநாசமே உண்டாகும். அதற்கு உட்பட்டு விட்டால் கூசவேண்டிய அவசியமே இல்லை என்பது இதில் தெளியும் உண்மையாகும். அஃதாவது உடைமை-உ.ை யவன்' என்னும் சம்பந்தம் ஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியில் ஒருவனாகச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவே தேர்ந்த உண்மையாகும். வரலாறுகள் : இந்த சம்பந்த ஞானம் இங்குக் குறிப்பிடப் பெற்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் வியாக்கிவானத்தில் இரண்டு வரலாறுகள் மூலம் விளக்கப் பெறுகின்றது, {1} வணிகன் ஒருவன் தன் மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளிநாடு சென்றான். பல ஆண்டுகள் அங்குத் தங்கிவிட்டான். அவன் மனைவியும் கருவுயிர்த்து ஒச் ஆண் மகவைப் பெற்றாள். மகனும் தக்க வயதடைந்து தந்தையின் தொழிலையே தன் தொழிலாக மேற்கொண்டு தன் தந்தையைப் போலவே பொருளீட்டு வதற்காக வெளிநாடு சென்றான். இருவரும் ஒருவரை யொருவர் அறியாதவர்கள், இருவரும் தத்தமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு நாள் ஒரு பந்தலில் வந்து தங்க தேர்ந்தது. அந்த இடம் இருவருக்கும் போதா தாக இருந்தமையால் விவாதம் உண்டாயிற்று. அச்சமயம் இருவரையும் அறிந்தான் ஒருவன் வந்து ' இவன் உன் தந்தை ; நீ அவன் மகன் ” என்று தந்தை-மகன் என்ற சம்பந்தந்தை அறிவித்தான். அப்பொழுது அவ்விருவரும் முன்பே நமது சம்பந்தம் தெரிந்திருந்தால் இரண்டு சரக்கு களையும் ஒன்று சேர்த்து அவற்றை விற்றுப் பொருளீட்டி 12. கிங்கரன் . வேலையாள் : கைங்கரியம் . அவன் செய்யும் தொழில். அஃதாவது அடிமைத் தொழில்.