பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வித சம்புத்தம் 7 மூன்று பதமும் மூன்று பொருளைச் சொல்லும். பிரணவம், சேததனுடைய சேஷத்துவத்தையும் (அடிமைத் தன்மையை பும்), நமஸ்ல ஈசுவர பாசதந்திரியத்தையும் (ஈசுவரனுக்கு வசம் பட்டிருத்தலையும்), தாராயணாய சேததன் ஈசுவரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும் (தொண்டையும்) தெரி விப்பனவாகும். முதற் பதமாகிய பிரவணம் அ + உ + ம என்று பிரியும். இங்ஙனம் பிரிந்திருக்கும் நிலையில் அகாரம் - பகவானையும், அதில் எறி மறைந்திருக்கும் தான்காம் வேற்றுமை (லுப்த சதுர்த்தி) சேஷத்துவத்தையும், உகாரம் . அந்த சேஷத்துவத் தின் அகங்யார்த்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் கவர னுக்கே உரித்தாயிருத்தலையும்) தெரிவிக்கும். சேர்ந்திருக்கும் நிலையைச் சம்ஹிதாகாரம் என்றும் பிரிந்திருக்கும் நிலையை அசம்ஹிதாகாசம்’ என்றும் சொல்லுவர்.: பரமான்மா - சீவான்மா உறவுகள் : அகாரத்தினால் 1) தங்தை தணயன் என்ற உறவும், 2) இரட்சிக்கப்படுபவன். இரட்சிப்பவன் என்ற உறவும், அறியக்கிடக்கின்றன. அகாரத்தின் மீது மறைந்து கிடக்கும் 'ஆய என்ற ந என்காம் வேற்றுமையின் உருபினால்) 3) சேஷ-சேஷி (அடிமை - அடிமை கொள்பவன்) என்ற உறவு சொல்லப்பெறுகின்றது. 14. இந்த விளக்கத்தைப் பெரியவாச்சான் பின்ளை அருளிய கடினப்படி”யிலும் காணலாம்.