பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவனித சம்பந்தம் 鬱 என்ற ஆண்டான் திருவாக்கின்படி "இங்கு ஒதிக்க ஒழியாது'; அழியாதிருக்கும். அஃதாவது அகாரத்தில் சொல்லப்பெது கின்ற எம்பெருமான், மகாரத்தினால் சொல்லப் படுகின்ற சீவான்மா இவர்களின் உறவு அநாதியாக இருத்து வருவதாகும். எக்காலத்து எங்தையாங் என்னுள் மன்னில் (2 : 9 :8) என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழித் தொடர் இக் கருத்தை அரண் செய்கின்றது. சீவான்: ஈக்களுக்கு "அயத' சம்பந்தமான பரமான்ம சம்பந்தம் அநாதியாக இருந்து வருவது போல் அசித்து சம்பந்தமான பிரகிருதி சம்பத்தமும் அநாதியாக இருந்து வருவதே. ஆயினும், அசித்து சம்பந்த மான பிரகிருதி சம்பந்தம் ஒரு காலத்தில் நீக்கப்படும். "அயந’ சம்பந்தமான பரமான்ம உறவு ஒழிக்க ஒழியாதது. இக்கருத்து ஆசாரிய விருதயத்தின் ஒன்று கூடின தாய்ப் பற்று அதுக்க மீண்டு ஒழிகையாலே பழ.வடியேன் என்னு:மது ஒன்றுமே ஒழிக்க ஒழியாது {12} என்றசூத்திரத்தால் தெளிவாக்கப் பெறுகின்றது. இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது வாதானும் ஒரு காலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால், என்றும் உளதாயிருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி என்று சொல்லுவது பொருந்துமோ? என்ற வினா எழுகின்றது. அதற்கு மணவாள மாமுனிகள் வந்தேறியான காலத்திற்கு அடிதெரியாமையாலும் அநாதி என்று பிரமாணங்கள் சொல்லுவதாலும் இ வ. ரு ம் (அழகியூ