பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவவித சம்பந்தம் * † இஷ்ட தெய்வத்தைப் வழிபடு கடவுளைப் பல்வேறு பாவனைகளால் வழிபடலாம் என்று நம் நாட்டு பக்திப் பனுவல்கள் பகர்கின்றன. ஆழ்வார் பாசுரங்களிலும் எம்பெரு மானைத் தாய் தந்தை, குகு, தெய்வம் என்று பேசப் பெற்றிருப்பதையும் இவர் கண்டிருக்க வேண்டும். இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டுதான் பாரதியார் பல்வேறு உறவுகளில் கண்ணனைக் கண்டு களிப்பெய்துகின்றார் என் து கருதுவதில் தவறொன்றும் இல்லை. குலசேகரப்பெருமாள் வித்துவக் கோட்டம்மசன் திருப் பதிகத்தில் (5-ஆம் திருமொழி) இந்த நவவித சம்பந்தமும் அடங்கிக் கிடப்பதாக தம் முன்னோர் குறித்துப் போயுன் ளனர். இதனை உரிய இடங்களில் காட்டுவேன்.