பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்த்ை தனியன் உறவு 蠶敬 பாம்பனை அப்பன் (7.10:5} தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய்ரீ கின்ற வாறு இவைஎன்ன நியாயங்களே (7.8:1) பெரிய அப்பனை, பிரமன் அப்பனை: உருத்திரன் அப்பனை, முனிவர்க் குரிய அப்பனை, அமரர் அப்பனை, உலகுக்கோர் தனியப்பன் தன்னை (8, 8 : :) என்று எம்பெருமானை அப்பனாகப்-தந்தையாகப் பாவித்துப் பாசுரங்கள் அருளியுள்ளதைக் காணலாம். எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசும் திருவாய் மொழியிலும் ( 4}, திருக்காட்கரை (9 6) பற்றிய திருவாய் மொழியிலும் பாசுரந்தோறும் 'அப்பன்' என்ற சொல் பாங்குற அமைந்திருப்பதைக் காணுமிடத்து தந்தை-தனயன் உறவின் அழுத்தமான பாங்கினைக் காணலாம். திருநெடுந்தாண்டகத்தில் இந்த உறவு இகு பாசுரங்களில் அமைந்திருக்கும் நேர்த்தி பன்முறை படித்து அதுபவித்து மகிழத்தக்கது. 2. திருக்காட்கதை : இது தென்திருக்காட்கரை என்ற பெயராலும் வழங்குகின்றது. கேரளத்தில் எர்ணாகுளம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து வட கிழக்குத் திசையில் எட்டுக் கல் தொலைவிலுள்ளது.பேருந்து வசதி உண்டு. தங்குவதற்கோ உணவுக்கோ எந்தவித வசதிகளும் இல்லை. இறைவன்: காட்கரை அப்பன்; தாயார்: பெருஞ்செல்வ நாயகி நாச்சியார், வாத்சல்ய வல்லி நாச்சியார். நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.