பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹽醬 நவவித சம்பந்தம் கதை துற்றும் உறவுநீர்ச் சேர்ப்ப! தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு 'அண்ணாய்' என்னும் குழவி போல் இன்ன செயினும் இனிதுதலை அளிப்பினும் இன்வரைப் பினள்ன்ை தோழி தன்னுது விழுமம் களைளுரோ இலளே கண்ஆர்வதிக்குவார்; இலன் - வெற்றிலள்; கதை குளிர் க ச ற் று; தூற்று. தூவுகின்ற; 4.தன் நீர் வன்மையையுடைய, உடன்று - மாறு டி.டு: அலைக்கும் வருந்திய பொழுது; தலை அளித்தல்-அன்பு செய்தல்; வரைப்பினள் - புரைக்கப் படும் எல்லைக்கு உட்பட்டவள்; விழும் - துன்பம்; கவிஞர்-நீக்குவார்; இலஸ் - பெற்றிலள்) என்பது பாடல், 'அன்னை அலைப்பினும், அணைப்பார் பிறரின்றி அவள் மாட்டே செல்லும் குழவிபோல, நீ அகுசின்றிப் பிரிவினும் நின்மாட்டே நின்று நின் தண் ளிையால் வாழும் நிலையினள்' என்று தோழி தலைவனை நோக்கிக் கூறும் கருத்தினையே ஆழ்வாரும் தன்னைக் குழந்தை நிலையிலும் இறைவனைத் தாய் நிலையிலும் வைத்துப் பேசுகின்றார். குழந்தையைக் காட்டிய குறுந் தொகைப் பாடலை படித்துவிட்டு ஆழ்வார் பாசுரத்தைப் படித்தால் பொருள் மேலும் தெளிவுறுகின்றது. 'தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னாய்’! என்று அழைக்கும் குழவி ,போல’ என்ற சங்கப் பாடலின் உண்மை ஆழ்வாரின் இறைமைப் பாசுரத்தில் புது முறை வில் அமைந்து புத்தொளி வீசி நின்று நயமுறுகின்றது. பாட்டின்பம் பக்தி உணர்வாக மாறி நம்மை மேலும் நெகிழ் விக்கின்றது. இவ்வுலக வாழ்வில் பக்தன் பல்வேறு துன்பங் களாலும் தொல்லைகளாலும் தாக்கப்பெற்றாலும் அவை தம் வினைப்பயனால் விளைந்தவை என்று உதறித் தள்ளிவிட்டு இறைவனையே நினைந்து உருகி உருகி அவனையே வழிபடு கின்றான்.