பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தந்தை-தணயன் உறவு திருமங்கை ஆழ்வார் எடுத்த எடுப்பில் திருமந்திரத்தைக் கூறும் முதல் திருமொழியிலேயே, எம்பிரான் எங்தை என்னுடையச் சுற்றம் எனக்கு அரசு என்னுடைய வாழ்நாள் (1.1:6) |பிரான் - உபகாரகன்; சுற்றம் . சகலவித பந்துவும்; அரசு - ஆண்டவன்; வாழ்நாள் - பிரான பூதன்; என்ற பாசுரத்தில் தான்கு விதமான சம்பந்தத்தைக் கூறி திருமந்திரத்தின் பொருளை விளக்கி மகிழ்கின்றார். பாரதியார் கண்ணனைத் தாயாகக் கருதி பாடும்போது பராசக்தியே அவருடைய தாயாகி விடுகின்றாள். பாரதியார் 'கண்ணன் பாட்டில் கண்ணன் - என் தாய், கண்ணன் - என் தந்தை என்ற தனித்தனித் தலைப்புகளில் பாடல்கள் காணப் படுகின்றன. இவற்றைப் படித்து அதுபவிக்கும்போது பிள்ளை உலக ஆசிரியரின் நவவித சம்பந்தம் தான் பாரதியாரை இம் முறையில் பாடத் தூண்டியிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையா ?