பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சக-இரட்சய சம்பந்தம் 25 3. கைகேயி தன் மகனுக்கு நன்மை செய்வது போல் தீங்கையே புரிந்தாள். இதனால் மாதா இரட்சகர் ஆகாதது தெளியப்படும். இரணியன் தன் மகன் பிரகலாதனைப் படுத்திய பாட்டை தாம் அறிவோம். இதனால் தந்தை இரட்சகராக மாட்டார் என்பது தெளிவு. 4. பாண்டவர்கள் ஆபத்துக் காலத்தில் திரெளபதியைக் காக்கத் தவறினவர்கள். கண்ணனின் திருநாமம் அவளைக் காத்தது. நளன் தமயந்தியை தடுக்காட்டில் கைவிட்டு அகன்றான் . ........ 5. நாட்டுக்குக் கண் போன்ற சந்திர சூரியர்களும் இரட்சகர்களாகார், காரணம். அவர்கள் சர்வேசுவரனுடைய ஆணைக்கஞ்சி விருப்பப்படி சஞ்சரிக்க முடியாதவர்களாகை யாலும், இரணியன், இராவணன் முதலானோர் கையிலகப் பட்டு இழிதொழில் செய்து திரிபவர்களாகையாலும் என்க. 8. திரிலோகபாலகனான இந்திரனும் தன் பதவி பறி போகும் என்று அஞ்சியிருப்பதனாலும், இந்திரஜித் சிம்ம சொப்பனமாக இருப்பதனாலும் மாபுலி கையில் செல்வத்தைப் பறிகொடுத்துக் கண்ணிரும் கம்பலையாக இருப்பதனாலும் இரட்சகனாகமாட்டான். 7. நான்முகனும் மதுகைடவர்கள் கையில் வேதங்களைப் பறிகொடுத்து கண் இழந்தேன், தனம் இழந்தேன் என்று கதறுபவனாகையால் இரட்சகனாக மாட்டான். 8. உருத்திரனும் எல்லா உயிர்களையும் கொல்பவ னாகையாலும், வாணனை இரட்சிப்பதாய்ச் சொல்லி, காக்சு முடியாமல் நழுவினமையாலும் இரட்சகனாக மாட்டான். எம்பெருமான் ஒருவனே இரட்சகன் என்பதை ஆழ்வார் பாசுரங்களில் பரக்கக் காணலாம். திருக்கண்ண்புரம் பற்றிய பெரிய திருமொழித் திருப்பதிக மொன்றில் (8. 9),