பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兹 懿 நவளித சம்பந்தம் பெத்தார் பெற்றொழிந்தார் பின்னும் கின்று அடியேனுக்கு உத்தாணய் வளர்ந்துள்ன் உயிராகி கின்றானை முத்த மாமதிகோள் விடுத்தானை எம்மானை எத்தால் யான் மறக்கேன் இதுசெல், என் ஏழை நெஞ்சே! (6)

ெற்றார்.தாய் தந்தையர் : உற்றான் ஆய்-பலவித பத்துவாய்: கோள்-கூடியரோகம்; எத்தால்.எக்காரணம் பற்றி , சொல்-விடைகூறு:

என்பது ஏழாம் பாசுரம். சரீரமாகிய தசைப் பிண்டத்தை கனத்திரமே உற்பத்தி செய்பவர்களான தாய் தந்தையர் :ெத்துப் போய்விட்டார்கள்; ஞானம், பக்தி முதலிய குணங்கள் என்னிடம் வளர்வதற்குரிய வழிகளில் எவ்வித முயற்சியும் செய்தார்கள் இலர். இங்கனம் அவர்கள் கைவிட்ட காலத்தில் எனக்கு எல்லா உறவு முறையாய் நின்று என்னை வளரச் செய்து வருகின்ற எம்பெருமானை எப்படி மறக்க முடியும்?" என்று தம் திருவுள்ளத்தோடு உசாவுகின்றார் ஆழ்வார். திரு மத்திரத்தில் தேறுகின்ற ஒன்பது வகையான உறவுகளையும் உடையவன் எம்பெருமான் என்பது 'உற்றானாய் நின்று வளர்த்து என் உயிராகி நின்றானை' என்ற அடியால் :ேறப்படுகின்றது. உலகைப் பிரண்யத்திலிருந்து எம்பெருமான் உய்வித் தமையைக் கூறும், பெரிய திருமொழியிலுள்ள 'மைங்கின்ற’ (11.5) என்ற பதிகத்தில் திருமங்கையாழ்வாரின் திருவாக்கு கள் (ஒன்பது பாசுரங்கள்) இரட்சக-இரட்சய உறவினை மிகத் தெளிவாக விளக்குகின்றன. இவற்றில் இரண்டு பாசுரங்களை ஈண்டுக் காட்டுவேன். --