பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சக-இரட்சய சம்பந்தம் 2 3 தகம் என்னுதல். காவலாவது சாத்திரங்களைக் கொடுத்தல் முதலியவற்றால் காத்தல்; இரட்சித்தல், இப்படிக் காத்தலால் தன் மேன்மை குலையாதோ என்னில்: கர்மங்கட்குக் கட்டுப் படாதவன், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று பிறந்து காப்பது என்றபடி மாவாகி-ஹயக்கிரீவ மூர்த்தியாய் அவதரித்தபடி, ஆமையாய், மீனாய்-சாத்திரங்கட்குக் காரண மான அவதாரங்கள். மானிடம்-இராமன், கிருஷ்ணன் முதலான அவதாரங்கள். இவை ஒழுக்கத்தை அதுட்டித்துக் காக்க வந்த அவதாரங்கள். அறந்தலை கிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித் திறக்தெரிந்து உலகம் ஆணச் செக்கெறி செலுத்தி என்கின்றான் கம்பன் இப்படி இரட்சிப்பது மேன்மை குலை யாமல் இருந்தன்று; அவதாரத்தாலே என்கின்றார் பின்னிரண் டடிகளில். இவ்வாறு இரட்சகம் சொல்லப்பட்டது, இரட்சகனைப்பற்றிச் சொன்ன ஆழ்வார் திருக்குடந்தை பற்றி ' ஆரா அமுதே' (5-8) என்று தொடங்கும் திருவாய் மொழியில் இரட்சிக்கப்படுபவனைப்பற்றி பேசுகின்றார். இத் திருப்பதிகத்தில், 2. பூலோகம், புவர்லோகம் சுவர்லோகம் என்னும் மூன்றும் கிருதகம்; ஜனலோகம், தபோலோகம், சத்திய லோகம் என்னும் மூன்றும் அகிருதகம் , மகர்லோகம் ஒன்றும் கிருதாகிருதகம். கிருதகம்-செய்யப்படுவது அழிவது: அகிர்தகம் செய்யப்படாதது, அழியாதது, கிருதாகிருதகம். செய்யப்பட்டும் செய்யப்படாமலுமாயிருப்பது; அழிந்தும் அழியாமலுமாயிருப்பது. இங்குக் கூறப்ப்ெற்றவை தினப் பிரளயத்தில் எனக் கொள்க.