பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ இரட்சக-இரட்சய சம்பந்தம் - 3 عظیم என்ற பாசுரத்தில் ஆகிஞ்சன்னியம் தெரிகின்றது. அநந்ய கதித்துவம் இப்பாசுரத்தின் முதலடியில் தெளிவாகின்றது. 'எனது துன்பங்களைக் நீ களைந்தாலும் சரி களையாவிட்டா லும் சரி-இரட்சித்தாலும் சரி இரட்சியாவிடினும் சரி-உன் காரி யத்தில் நீ எப்படியிருந்தாலும் என் காரியத்தில் நான்-உன் திருவடிகளைப் பற்றுவதில் உறுதியாக உள்ளேன்’ என்கின் ஹார். இதனால் அவனைக் கொண்டு தன்னைக் காத்தலையே எ தி ர் நோக்கியிருப்பவன் சீவான்மா - இரட்சயன்-என்பது புலனாகின்றது. ஆழ்வார்கள் குறிப்பிடும் மூவுலகு உண்டு உமிழ்ந்த வரலாறுகள் யாவும் இரட்சக - இரட்சிய சம்பந்தத்தையே குறிப்பிடுகின்றன என்று சொல்லுவதில் தவறு ஒன்றும் இல்லை."மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வன் (திருமாலை-1) 'பாரினை உண்டு, பாரினை உமிழ்ந்து (பெரி. திரு. 4.10:5) 'உண்டாய் உலகு ஏழ் முன்னமே, உமிழ்ந்து மாயையால் புக்கு (திருவாய்-1.5:8) என்பன போன்ற தொடர்கள் பல்வேறு பாசுரங்களில் காணப்பெறுவதைக் கண்டு மகிழலாம். இரட்சக.இரட்சய உறவுமுறை ஆழ்வார் பாசுரங்களில் காணப்பெறும் இரண்டு வரலாறுகளால் உறுதிப்படுகின்றது. முதல் வரலாறு : வைதிகன் பிள்ளைகள் பற்றியது. (1) தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதியுகத் தனியொரு தேர்கடவித் தாயொரு கூட்டியளன் அப்பு (பெரியாழ். திரு. 1.6:7) 'தப்பின-கைதப்பிப் போன தனமிகுசோதி-பரமபதம் ; கடவி.நடத்திi