பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சக-இரட்சய சம்பத்தம் 3 இவற்றில் குறித்த முதல் இதிகாசம் : ஒரு வைதிக அந்தணனுக்கு நான்கு குமாரர்கள். முதல் பிள்னை பிதித்து பூமியைத் தொட்டதும் காணப் பெறவில்லை. இரண்டானது. மூன்றாவது பிள்ளைகளின் நிலைமையும் அப்படியே. பெற்ற வளும் கூட இன்னவிடத்தில் போவிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது மூன்று பிள்ளைகளும் கதைந்தமையால் நான்காவது பிள்ளையைக் கருவுயிர்க்கப் போகும் சமயத்தில் அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வத்து இந்த ஒரு பிள்ளையையாயினும் பாதுகாத்துத் தத்தருள வேண்டும் என்று வேண்டினான். அதற்குக் கண்ணபிரான் அப்படியே செய்வதாக வாக்குத் தந்தான். ஆனால், கருவுயிர்த்த அன்று ஒரு வேள்வியில் தீட்சிதனாக இருக்க வேண்டியிருந்ததனால் கருவுயிர்க்கும் இடத்திற்கு எழுந்தருள முடியாத நிலையில் இருந்தான். அருகிலிருந்த பார்த்தன் தான்போய் இரட்சிக் கின்றேன் என்று வாக்குத் தந்து அந்தணனையும் கூட்டிக் கொண்டுபோய்க் கருவுயிர்க்கும் இல்லத்தைச் சுற்றிக் காற்று கூட துழைய வொண்ணாதவாறு சரக்கூடம் அமைத்துக் காத்துக் கொண்டு நின்றான். அன்று பிறந்த பிள்ளையும் வழக்கப்படி மாயமாய் மறைந்தது. அதனால் மிக்க சோக மடைந்த அந்தணன் அருச்சுனனை மறித்து 'அதமனே, உன்னாலேயன்றோ என் பிள்ளை போம்படி ஆயிற்து: கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ தடுத்தாய் ? என்று நிந்தித்து அவனைக் கண்ணபிரானருகே இழுத்துக் கொண்டு வந்தான். கண்ணன் அதுகண்டு முறுவலித்து அவனை விடு; உன் பிள்ளையை நான் கொண்டு வந்து தருகின்றேன் என்று அருளிச்செய்து, அந்தணனையும் தன்னுடன் கொண்டு தேரிலேறி, அகுச்சுனனைச் செலுத்தச் சொல்லி அத்தேருக்கும் இவர்கட்கும் திவ்விய ஆற்றலைத் தனது சங்கற்பத்தால் க ற் பி த் து இவ்வண்டத்திற்கு வெளியே நெடுந்து ரம் அளவும் கொண்டு சென்று, அங்கு ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தி, தன் நிலமான த.வி.ச.-8