பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சக-இரட்சய சம்பந்தம் 3盛 iஒது-ஓதி உணர்தற்குரிய வாய்மை-சத்தியவசனமான வேதம் , உவனியப்பிறப்பு-உபநயனம் செய்வதால் வரும் இரண்டாம் பிறப்பு ; அந்தணன்-சாந்தீபினி : காதல் என் மகன்.அன்புக்கு இடமான புத்திரன்; கண்டு. அவள் இருக்கும் இடம் உணர்ந்து ; கோதில் வாய்மையினான் - பழுதுப்படுதல் இல்லாத மெய்ம் மொழிகளையுடைய! இவற்றில் குறித்த இதிகாசம் : கண்ணபிரான் கம்சனைக் கொன்று உக்கிரசேனனுக்கு முடிசூட்டிய பின்பு, அவந்தி நகரிலிருந்த சாக்தியீனி என்ற அந்தணரிடம் சகல சாத்திரங் களையும் கற்றான். குருதட்சினை கொடுக்கும் திலையி லிருந்தான். அந்த ஆசிரியர் கண்ணனுடைய சிறப்பை அறிந்த வாாகையால் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு மேற்குக் கடலில் பிரபாச தீர்த்தத் துறையில் நீராடும்போது மூழ்கி இறந்துபோன தன் மகனைக் கொண்டுவந்து தரவேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். கண்ணபிரானும், * அப்படியே செய்கின்றேன் என்று ஒப்புக் கொண்டு கடல் நீரில் வாழ்கின்ற சங்கு வடிவமான 'பஞ்சஜனன் என்ற அசுரனே அந்த அந்தணச் சிறுவனைக் கொண்டு போயினன் என்பதை வருணனால் அறிந்து, கடலில் இறங்கி அவ்வசு ரனைக் கொன்று அவன் உடலாகிய பாஞ்சசன்யத்தை எடுத்து வாயில் வைத்து ஊதிக்கொண்டு யமபுரிக்கு எழுந்தருளி அங்கு யாதனையிற் கிடந்த அந்தச் சிறுவனை அவன் இறந்தபோது கொண்டிருந்த உருவம் மாறாதபடி கொண்டு வந்து தட்சிணையாகக் கொடுத்தான் என்பது வரலாறு. பெரியாழ்வார் திருமொழியொன்றில் (4.10) அரங்கத்து அரவணைப் பள்ளியானை நோக்கி, அல்லந் படாவண்ணம் காக்க வேண்டும் (3) ஆற்றைக்கு கீ என்னைக் காக்க வேண்டும் (4)