பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சக-இரட்சவ சம்பத்தம் 慧擎 போக்குகின்றான் மருத்துவன். நோய் நீங்கும்பொருட்டு நோயாளி அத்தச் சிகிச்சைத் துன்பங்கனைப் பொறுத்துக் கொள்ளுகின்றான். இத்துன்பங்களை விளைவித்த மருத்துவ கனிடமும் நீங்காத அன்புடையவனாகவே இருக்கின்றான். இங்கனமே துன்பங்களைக் கொடுத்தும் இறைவன் ஆன்மாக் களை உய்விப்பான் என்பது வைணவ சமயக்கொள்கை, இறை வனது கருனை வென்னம் துன்ப வடிவிலும் தம்மை வந்த.ை யும். இறைவனே அனைத்தையும் அருனிக் காப்பன் என்ற துணிவு ஏற்பட்.பின் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை. இந்த எடுத்துக்காட்டில் மருத்துவன் திலையில் எம்பெருகானையும் நோயாளியின் நிலையில் சீவான்மாவையும் வைத்துக் கூறப் பெற்றுள்ளகை அறியப்படும்.