பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த உறவு திருமந்திரத்தினை முதற்பதத்தின் ஓம்’ என்பதிலுள்ள மூன்று எழுத்துகளில்(அ+உ+ம) என்பதிலுள்ள அகாரத்தில் ஏறி மறைந்துள்ள ஆய’ என்னும் நான்காம் வேத்துமை உருபால் (லுப்த சதுர்த்தியால்) தெரிவிக்கப் பெறு கின்றது. இந்த உறவு அடிமை கொள்பவன் - அடிமை என்ப தாகும். சீவான்மாவுக்கு அவனுடைய கை, காலகள் முதலான உறுப்புகள் கூடிய உடல் சேஷமாவது போன்று, பரமான் மாவுக்குச் சரீரமாக நிற்கும் இந்தச் சீவான்மா சேஷபூதன் (அடிமை ஆகின்றான். சர்வேசுவரன் தன்னுடைய திருவுள்ளத்தின் சங்கல்பாதுகுணமாய்த் தனக்கே உரிய விருப்பப் பொருளாய் உரிமையாக்கிக் கொள்ளுகின்றான், அதனால் பரமான்மா சேr {ஆண்டான்) ஆகின்றான். பகலவனின் ஒளி அவனைவிட்டுப் பிரியாமல் காணப் பெறுவது போல, பரமான்மாவை விட்டுச் சீவான்மா பிரியா மல் காணப்படுவதால் அவனுடைய அமிச பூதனாகின்றான். அங்ஙனமே சீவான்மாவை விட்டுப் பரமான்மா பிரியாமல் இருப்பதால் சீவான்மாவை அமிசமாக உடையவனா கின்றான் டிரான்மா, மண்குடம் கருமையாக உள்ளது. துணி வெண்மையாக உள்ளது. கருமை, வெண்மை விசேஷணங்கள். குடமும், துணியும் விசேஷ்யங்கள். இந்த விசேஷ்ய விசேஷணங்கள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதன போல விசேஷ்யமான பரமாத்மாவும் விசேஷணமான சீவான் காவும் ஒருவரை விட்டு ஒருவர் விலகிநிற்க இயலாதவர்கள்.