பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேr-சேஷ உறவு 器懿 இரத்தினத்திலிருந்து அதன் பிரகாசம் வேறுபடாமல் இருப் பது இரத்தினத்திற்குப் பெருமை”தருவது. பூவை:விட்டு அதன் மணம் வேலுபடாமல் இருப்பது பூவிற்குப் பெருமை தருவது, அதுபோல, பரமான்மாவை விட்டுப் பிரியாது இருக்கும் சீவான்மா பரமான்மாவிற்கு கைங்கரியம் (தொண்டு) புரிவது சீவான்மாவுக்குப் பெருமை தருவது, இரத்தினத்திற்கு ஒளியும் பூவிற்கு மனமும் போலே சீவான்மாவிற்குக் கைங்கரியம் பெருமையைத் தருவது. கைங்களியுமே சீவான்மாவின் சொரூபமாகும். சேஷத்துவமே ஆன்மாவுக்குச் சொரூபம்’ என்பது முமுட்சுப்படியின் வாசகம், அதாவது சேததன் ஈசுவரனுக்கு சேஷபூதன் (அடிமை) என்பதாகும். எம் முறையில் அடிமையாகின்றான் என்பதனை தோக்குதல் வேண்டும். ஈசுவரன், சித்து, அசித்து என்பன வைணவ தத்துவங்கள். இவற்றுள்ஈசுவரனை விட்டு மற்ற இரு தத்துவங் களையும், 1. சித்து + சித்து, 2. அசித்து + அசித்து, 3. சித்து-அசித்து, 4. அசித்து + சித்து என்று இணை களாகப் பிரித்து அமைத்து இவற்றிற்குச் சேவீ-சேஷபாவனை யாகின்ற சம்பந்தத்தைச் செப்புதல் வேண்டும். இவற்றை 1. சேவr.சேஷப் பொருள்களின் இச்சை, 2. சேஷி-சேஷப் பொருள்களை மேற்கொள்ளும் புருஷனுடைய இச்சை, 3. சேஷப் பொருளுடைய இச்சை, 4. சேவrயினுடைய இச்சை என நான்காகப் பிரித்து ஆராயலாம். 1. சேஷத்துவம் - இது கட்டிப் பொன் போன்றது. கட்டிப் பொன் எப்படி அதனை உடையவனுக்குப் பெருமை யைத் தந்து, அவனுக்குப் பிரியமானபடி 2யன்படுத்திக் கொள்வதற்குத் தக்கத்ாகவும் இருக்கின்றதோ, அப்படியே சீவான்மா தன்னை உடைய ஈசுவரனுக்குப் பெருமையை ஈந்து அவன் விருப்பப்படி விநியோகப்படுத்திக் கொள்வ தற்குத் தகுதியுடையதாகவும் இருக்கின்றது. 2. முமுட்சு - 55 ஒப்பிடுக. டிை - 51.