பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேr.சேஷ உறவு - 盛盘 இது மூன்றாவதாகச் சொன்ன சித்திற்கும் . அசித்திற்கும் உள்ள தொடர்பு. ஜைமினி மாமுனிவர் வேள்வி என்னும் செயலிற்குச் செய்பவனாகிய தன்மையில் எசமானன் சேஷப் பொருள் எனக் கருதுகின்றார். இங்கு வேள்விப் பொருளாகிய சேஷிக்கு இச்சை உண்டாவதற்கு வழி இல்லை. சேஷப் பொருளாகிய எசமானன் வேள்விக்குத் தொடக்கமாகிற சிறப் பிற்கும் காரணமாகலின் இந்த வேன்.விக்கு நான் வேண்டும்" என்னும் தன்னிச்சையால் உபாதேயப் பொருளாகப் பார்க்கப் படுகின்றான். அதனால் எசமானனுக்குச் சேஷத்துவம் " உண்டு. A அசித்துக்கும் சித்துக்கும் உள்ள தொடர்பைப் பொன், பொன்னுடையவன் என்னும் இடங்களில் காணலாம். இங்கு சேஷப் பொருளாகிய பொன்னுக்கு இச்சை உண்டாவ தில்லை. சேஷியான மெசன்னுடையவனே இப்பொன் பொன்னுடையவன் என்னும் சிறப்பிற்கு உடலாகையால், நமக்கு வேண்டும்' என்னும் தன்னிச்சையால் பொன்னை எடுத்துக் கொள்ளுகின்றான். இவ்விதம் பொன் உபாதேயமr யிருத்தலின் அதற்குச் சேஷத்துவம் உண்டு என்பது தெளிவு. இக்கூறியவற்றால் சித்து அசித்துகளுடைய சேr . சேஷபாவனைத் தொடர்பை ஒருவாறு தெரிந்துகொண் டோம். இவற்றுள் சேதநன் ஈசுவரனுக்குச் சேஷபூதனாய் இருக்குந் தன்மை எப்பகுதியைச் சார்ந்தது என்பதைத் தெரிவு செய்வோம். (1) மன்னனுக்குக் கன்மத்தால் ஊழியன் சேஷப் பொருளாகின்றான். இங்கோ ஈசுவரனுக்குச் சேதநன் அங்ங்னம் கன்மத்தில் சேஷப் பொருள் அல்லன். ஆதலால் ஈசுவரனுக்கும் சேதநனுக்கும் உள்ள தொடர்பு, மன்ன னுக்கும் ஊழியனுக்கும் உள்ள தொடர்பு போன்றதன்று.