பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேஷி-சேஷ உறவு 43 (2) ஆதிசேடனைப் பொன்னாகவும் நாராயண்னைப் பொன்னையுடையவனாகவும் பொய்கையாழ்வார் கூறுவார். சென்றால் குடையாம் ; இருந்தால்சிங் காசனமளம் : கின்றால் மரவடியாம் ; கீள்கடலுள்-என்றும் புனையாம் ; அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாம் திருமாற்கு அரவு (மரவடி-பாதுகை; புனை-திருப்பள்ளி மெத்தை; அணிவிளக்கு-மங்கள தீபம்; பூம் பட்டு-அழகிய திருப்பரி வட்டம்; புல்கும்-தழுவிக் கொள்வதற்கு அணை-தலையணை; என்பது பாசுரம், திருவனந்தாழ்வானைப்போல எம்பெரு மானுக்கு எல்லாக் காலங்களிலும் எல்லாவிதமான அடிமை களையும் செய்யப்பெற வேண்டுமென்று திருவுள்ளங் கொண்ட ஆழ்வார் அத்திருவனந்தாழ்வான் செய்யும் அடிமைச் செயல்களை எடுத்தருளிச் செய்கின்றார். எம்பெருமான் உலாவி யருளும்போது மழை-வெயில் திருமேனியில் படாத படி குடையாக வடிவெடுப்பன்; எழுந்தருளியிருக்கும்போது திவ்விய அரியணையாக வடிவங் கொள்வான்; நின்று கொண்டிருக்கும்போது திருப்பாதுகையாக வடிவம் கொண் டிருப்பன்: திருப்பாற் கடலில் திருக்கண் வளர்ந்தருளுங் காலத்தில் திருப்பள்ளி மெத்தை உருவமாக இருப்பன்: ஏதேனும் ஒன்றை எம்பெருமான் விளக்கு கொண்டு காண விரும்பும்போது திருவிளக்காக மாறிப் பணி செய்வன், சாத்திக் கொள்வதற்குத் திருப்பரி வட்டத்தை விரும்பும்போது அதுவு மாக வடிவாய் கொள்வான் சாய்ந்தருளும்போது தழுவிக் கொள்வதற்கு உரிய தலையணையுமாகவும் வடிவங்கொண்டு உதவுவான்' என்பது பாசுர விளக்கம். ஆழ்வார் பாசுரங்கள் : இந்த உறவை ஆழ்வார் பாசுரங் களில் வரும் இடங்களை நினைந்து அநுபுவிப்போம். 5. முதல் திருவத், 58