பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேஷி-சேஷ உறவு 链碳 ராசையினால், ' நின்னை வந்தடைந்தேன், என்னுடைய முன்னைத் தீவினைகளைக் கருத்தில் கொண்டு என்னைக் கைவிடலாகாது, நீயே சர்வ ரட்சகன் ; நானோ அதனதன் , அதந்தியகதி, என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்காகப் பிராட்டியும் அகலகில்லேன் இறையும் என்று தின் திரு மார்பில் உறைகின்றான். எனவே என் குற்றங்களைப் பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும் " என்று வேண்டுகின்றார். ஒவ்வொரு பாசுரத்திலும் ' அடியேனை ஆட்கொண்டருளே " என்ற வேண்டுகோளைக் காணலாம். ஒன்பதாம் பாசுரத்தில் மாயனே, எங்கள் மாதவனே ' என்று பிராட்டி சம்பத்தம் கூறப்பெற்றிருப்பதனால் புருஷகாரம் தெளிவாகின்றது. கண்ணார் கடல் சூழ் :1-10) என்று தொடங்கும் திருவேங்கடம்பற்றிய திருப்பதிகத்திலும் பாசுரந்தோறும் ஆழ்வார், அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1) அலங்கல் துளய முடியாய் ! அருளாயே (2) ஆரா அமுதே அடியேற்கு அருளாயே (3) அண்.ா ஆடியே னுக்குஅருள் புரியாயே (A) (தென்-மத்திய இருப்பூர்தி) இறங்கிச் செல்ல வேண்டும். பேருந்து வசதிகள் உள்ளன. (சதிரவசதிகள் இலவசமாக) உள்ளன. கட்டணம் செலுத்துவோருக்கு நல்ல குடில்கள் (Cottages) வசதிகள் உள்ளன. உணவு வசதிகள் கிடைக்கும். ஸ்ம் பெருமான் : திருவேங்கடநாதன், திருவேங்கடமுடையான், சீநிவாசன், வேங்கடநாதன், பாலாஜி, வேங்கடாசலபதி-பல திருநாமங்கள். தாயார் அலர்மேல் மங்கை (திருச்சானூரில்); நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்