பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நாயக-நாயகி சம்பந்தம் திருமத்திரத்திலுள்ள ஓம்’ என்ற முதற் பதத்தின் மூன்று எழுத்துகளில் (அ+உ+ம) உ-காரத்தினால் இயக-காங்கி சம்பந்தம் நவிலப் பெறுவதாக முன்னர்க் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூரலாம். இந்த உறவு ஈண்டு விளக்கப் பெறுகின்றது. எம்பெருமான் ஆழ்வார்களிடம் ஞானத்தையும் வளர்த் தான்; பக்தியையும் வளர்த்தான். தாமான தன்மையிலிருந்து பாடும்போது ஞானப் பாசுரங்கள் வெளியாயின. பிராட்டி யாரின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பேசும் போது பிரேமப் பாசுரங்கள் முகிழ்த்தன. நம்மாழ்வார் திருவாய் மொழியில்தாமான தன்மையில் பாடிய பாசுரங்கள் 13 பதிகங்க ளாகவும், பிராட்டியாரின் தன்மையிலிருந்து பாடிய பாசுரங்கள் 27 பதிகங்களாகவும் வடிவெடுத்துள்ளன. திருமங்கையாழ்வார் பாசுரங்களில் 24 பதிகங்கள் பெண் பாவனையில் பேசுவன வாக அமைந்துள்ளன. பெரியாழ்வார் பாசுரங்களில் இரண்டு பதிகங்கள் அகப்பொருள் அமைந்த பாசுரங்களாக அமைந் துள்ளன. இதனை அழகியமணவாளப் பெருமாள் தாயனார்