பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயக-தாயகி சம்பந்தம் 器暂 பரமபக்தி", என்பவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்கனால் இவ்வாழ்வரர் களின் அருணிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்பதாகச் சமயச் சான்றோர்கள் கொள்வர். ஆழ்வார்கள் தரமான தன்மையைவிட்டுப் பெண்பாவ னையை ஏறிட்டுக் கொள்வது எதற்காக? என்ற வினா எழு கின்றது. இதற்கு விடைகாணல் வேண்டும். ஆழ்வார்கள் பெண்தன்மையைத் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகின்றனரல்லர். இந்த நிலை (அவஸ்தை) தானே பரவசமாக வத்து சேரு கின்றது. புருடோத்தமனாகிய எம்பெருமானின் பேசாண் மைக்கு முன்னர் உலகம் அடங்கப் பெண் தன்மையதாயிருக் கையாலும், சீவான்மாவுக்குச் சுவாதத்திசிய நாற்றடிேயின் றிப் பாரதந்திரியமே வடிவாயிருப்பதாலும், இவ்வகைகளுக் கேற்பப் பெண்பாவனை வந்தேறி என்றே கொள்ளலாம். வைணவர்களிடையே நிலவும் இன்னொரு மரபும் உண்டு. தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானின் பேரழகில் ஈடு பட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயுமதி: கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்று உண்டு. ஆனால், ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம்பெருமானாகிய புருடோத்த மனை அதுபவிக்கக் காதலிக்கின்றனர் என்பதாகக் கொள்ளு வதே இந்த மரபு. 4. பரமபக்தி-எம்பெருமானை மேன்மேலும் இடைவிடாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல். அன்றியும், எம்பெருமானோடு கூடும்போது கூகிக்கும்படியர்கiம், பிரியும் :ேசது துக்கிக்கும்படியாகவும் இருப்பது பரபக்தி பகவானுடைய முழுமையான நேர்க்காட்சி பரஞானம் , அவனுடைய அதுபவம் பெறாவிடில்_நீரைவிட்டுப் பிரிந்த மீன்போல மூச்சு அடங்கு ம்படி இருந்தல் பரமபக்தி. இவ்வாறு நம் பண்டைய ஆசிரியர்கள் நினைவுபடுத்துவர். 5. சுவாதந்திரியம்-சுதந்திரத்தன்மை. 8, பாரதந்திரியம்-பிறருக்கு வசப்பட்டிருத்தல்.