பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨慧 ------ நவவித சம்பந்தம் கருத்தைத் தெரிவிப்பனவாக இருக்கும். இதுவே ஆசா. ஹிரு. 183 சூத்திரத்தில் சம்பந்தத்தில் உணர்த்தியாகிற பிரஜ்ஒாவஸ்தை என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. தோழிப் பாசுரங்களை ஆழ்ந்து அதுசத்தித்தால் இக்கருத்து தட்டுப் படும். சிலவற்தைக் காட்டுவேன். (1) திருவாய்மொழியில் தீர்ப்பாரை யாமினி (4.5) இன்த பதிகத்தில், இவளைப் பெரும்பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று ; அக்இோ! குவளைத் தடங்கண்ணும் கோவைச் செல்வாவும் பயந்தனள், கவனக் கடாக்களிது அட்ட பிரசன்திரு காகத்தால் தவனப் பொடிகொண்டு நீர்இட் டாடுமின்: தணியுமே (5) ! பரிசு மார்க்கம் அணங்கு ஆடுதல் வெறியாடுதல்; குவனை தடகண் குவளை மலர் போன்ற விசாலமான கண்கள்; கோவை - கோவைக் கணி; பயந்தனள் . நிறவேறுபாடு அடைந்தனள் (பயப்பு-நிறவேறுபாடு); கவனம் - ஓர் அளவு, கடா - மதம்: களிறு . (குவல யாபீடம் என்ற) யானை அட்ட - கொன்ற; பிரான் . சுவாமி, த.வனப் பொடி - வைணவர்களின் பாதது.ாளி; இட்டிடுமின் தூவுங்கள், தணியும் - நோய் தீரும்) என்பது ஐக்தாம் பாசுரம். இது வெறி விலக்குத் துறையைச் சார்ந்த பரசுரம். தலைவியின் மன வாட்டத்தையும் உடல் வேறுபாட்டையும் கண்ட தாயார் கட்டுவிச்சியின் குறியால் இவை தெய்வத்தினாலாயிற்று என்று துணிந்து வேலனைக் கொண்டு வெறியாட்டு எடுக்கும் நிலை இது. தோழி அறத்தோடு தின்றோ வேறு வழிகளை மேற்கொண்டோ இதனை நிறைவேற்ற விடாமல் தடுக்க முயல்வது வெறி விலக்கு என்று வழங்கப் பெறும். இதில் தோழி சொல்லுவது;