பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穩露 தவவித சம்பந்தம் MMDASACCCCAMDMSMMMttGCADSMBACMEACCCSBBSAGGSAMMAAAS SASAASAAAS அத்து வெறிபாட்டுக்குத் தயாராகின்றான். ஒருபக்கத்தில் அசிதரைக் கூந்தல் செம்முதுச் செவிலியர் சூழ தாய் அர்த்திருக்கின்றாள். தலைவி பக்கத்து அறையொன்றில் வெறி:டுவதனால் தன் கனவு வெளிப்பட்டுவிடுமோ? என்று அஞ்சிக் கண்ணி விட்டு அழுத நிலையில் இருக்கின்றாள். இச்சமயத்தில் களத்தில் தோழியின் பிரவேசம் நடைபெறு கின்றது. வேலன்ை நோக்கி, 'வேலனே! உன் பூசையை நிறுத்துக. இவளுக்கேற்பட்ட நோய் மிகப்பெரிய தெய்வமான எம்பெருகசன் விஷயமாக ஏற்பட்டது. இவளுடைய நோய் 'இப்படிப் பட்டது” என்று வரையறுத்துச் சொல்ல ஆற்றலில் லாத பொருளற்ற தோத்திரங்களைக் கேட்டுக் கொண்டிருக் கின்ற சிறு தெய்வ விஷயமாக ஏற்பட்டது அன்று' என்கின் றான். தாயாரை நோக்கி, 'நீங்கள் இவ்வாறு கலங்குவது உசிதமன்று. உங்களைவிட நான் மிகச் சிறியவனேயாயினும், இப்போது என் பேச்சுக்குச் சிறிது செவி சாயுங்கள். இந்த விபரீத முயற்சியை விட்டொழித்து உலகமுண்ட திருவாய னுடைய திருநாமங்களை இவள் செவிப்படுமாறு சொல் லுங்கள். அவனுடைய திருத்துழாய் மாலைப் பிரசாதத்தைக் கொணர்ந்து இவளுக்குச் சூட்டுங்கள். இதுவே இவள் நோய்க்கு மருத்து' என்று பேசுகின்றாள். இதில் தலைவியின் அதந்யார்ஹ சேஷத்துவத்தைத் தோழி வெளிப்படுத்துவது தெளிவாகின்றதல்லவா! (3) திருவாய்மொழியில் துவளில் மணிமாடத்து’ (8.5) என்ற பதிகத்தில், கரைகொன் பைம்பொழில் தண்டி ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு உரைகெ ளின்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர் திரைகொள் பெளவத்துச் சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி வளந்ததும் கிறைகள் மேய்த்தது மேவி தற்றி கெடுங்கண் நீர்மல்க கிற்குமே (3)