பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

அவள் ஆரம்ப எழுத்து என்பதை அது காட்டியது.

அவள் இளமை ஆசைகளை எல்லாம் இதில் கொட்டி வைத்து இருந்தாள்

‘'அவள் தான் இவள்?’ என்று சந்தேகம் வந்தது. நீ யாரை வைத்து எழுதுகிறாய்'’ என்று கேட்டேன்.

‘'சுவரை வைத்துத்தான் சித்திரம் - வரைகிறேன்; என்றாள்.

ஆதாரத்தோடுதான் தான் எழுதுவதாக அறிவித்தாள்.

‘கரிக்கட்டை ‘ என்று அந்தக் கதைக்குத் தலைப்புத் தந்தாள்.

அவன் அழகன் என்கிறாள்;

‘அவன் அழகன் என்கிறாய்; எப்படி அவளிடம் அவன் இப்படி நடந்து கொண்டான் என்று கேட்டேன்.

‘அப்படித்தான் இந்த ஆண்கள்’ என்றாள்.

அந்தக் கதைக்கு அமோகமான வரவேற்பு ஏற்பட்டது.