பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

நாங்கள் மாறுதலை விரும்பி விட்டோம். எங்கள் பழைய பல்லவி எடுபடாது. தெய்வங்களைப் பாடுவதை விட்டு உழைப்பை மதிக்கக் கற்றுக் கொண்டாம்; நீ . இந்திரன் சந்திரன், என்று புகழ்வதை விட்டுவிட்டோம்;

“டி.வி.யில் கந்த புராணம் போடுகிறோமே உங்கள் அபிப்பிராயம்?”

“மனுஷனைப் பற்றிப் பேசும் காலம் இது; மனுஷனைச் சந்திக்கப் பயப்படுகிறீர்கள். மக்களைத் திசை திருப்ப எங்கள் கதைகளைப் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்

அதற்குமேல் இவரைச் சற்றுப் பேசவிட்டால் விபரீத மாகி விடும் என்று ஜன கண மன பாடி முடிக்க விரும்பி னாள்.

‘இக்கால இளைஞர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி ஏதாவது?’

‘'எந்தத் துறையில்'’ என்று அவர் திருப்பிக் கேட்டார்

‘'அறிவுரை?'’

“அறவுரைகள் சொல்லிப் பழகிய எனக்கு அறிவுரை கூறத் தெரியாது. அதற்கு அனுபவம் தேவை; மண்ணுலகில் வாழ்ந்து அவர்கள் பிரச் சனைகளை அறிந்துதான் அறிவுரை கூறமுடியும். அறவுரைகள் கூறக் கீதை, குறள் நீதிநெறி, நல்