பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘நடிகர் தான், தனக்கும் அவளுக்கும் தொடர்பே இல்லை என்று சொல்கிறாரே?’

‘வீணையைத் தொட்டு இருக்கிறார். மீட்கவில்லை; ஓசை எழுந்திருக்கிறது; அவ்வோசையை ரசிக்க வில்லை. நடிகைதான் என்றாலும் அவளும் ஒரு பெண்தானே; சேர்ந்து நடித்தவள் சேர்ந்து வாழத் துடித்து இருக் கிறாள்; அதே வேதனையில் அவள் ஆழ்ந்திருக்கிறாள். எழவே இல்லை .

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘நடிகர் தரணியின் மிடுக்கான தோற்றம் அவளைக் கவர்ந்திருக்கிறது. ஷட்டிங் முடிந்தாலும் அவர் போன பிறகுதான் காரை எடுக்கச் சொல்வாங்க’

‘ஏக்கம்தான் சாவுக்குக் காரணம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

‘அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்; வெறும் சந் தேகமே தவிர, உண்மை என்று கூறமுடியாது’.

‘தரணி எப்பொழுதாவது வீட்டுக்கு வந்திருக் கிறாரா?

‘வந்தால் அவங்க ஏன் சாகறாங்க. நான்தான் சொன்னேனே அவர் ஒரு முரட்டுக்காளைன்னு

--

--

--