பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இவன் தேவியை அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

‘கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஒரு வாசகம் எழுதி மாட்டி இருந்தான்.

பார்த்தாள் : இவனுக்கு ஒரு பாடம் கற்பித்தாள்.

வடை பாயசத்தோடு உலாவு படைத்தாள். இவன் படம் முன்னால் வைத்துக் கற்பூரம் காட்டினாள்.

‘இலை போட்டுக் கொண்டு சாப்பிட்டாள். ‘பசிக்குது என்று பரிதாபத்தோடு கேட்டாள்.

‘தெய்வம் சாப்பிடாது வழிபாடு போதும் என்றாள்.

அந்த வாசகத்தை அந்த இடத்திலிருந்து நீக்கி கட்டான்.

‘உட்காருங்கள் சாப்பிடுங்கள்” என்றாள். அவனைக் கணவனாக நடத்தினாள்.

X

-

X

அவன் சிகிரெட்டுப் பிடித்தான் ; அளவுக்கு அதிக மாகப் பிடித்தான்; அவள் எவ்வளவோ சொல்லிப்பார்த் தாள். அவன் கேட்கவே இல்லை.

‘சிகரெட்டுப் பிடிக்காதீர்’ என்று சொன்னாள்

‘Cancer’ வரும் என்று சொல்லப்போறே அவ்வளவு தானே.

‘நாற்றம் வருது’ அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; முகத்தை முகத்தை அணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.