பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

இவன் ஒரு முறை பஸ்சில் பயணம் செய்தான், ‘எதுவரை’ என்று கண்டக்டர் கேட்டார். கடைசி வரை ‘உங்கள் மனைவி ‘வீடுவரை’ என்றான் .

  • - *

ஒரு நாள் கோபமாகப் பேசினாள். ‘கொஞ்சம் ரேடியோலை நிறுத்த முடியுமா?’

‘எத்தனை மாசமா சொல்றேன். காஞ்சிபுரம் புடவை வாங்கி வாங்க என்று. அதிலே கொலஸ்டால் இல்லை. காரம் மணம் இல்லை; உடம்புக்குக் கெடுதி இல்லை. இதெல்லாம் பொம்பளைங்க விவகாரம். போய் வாங்கி வாங்கன்ளா வாங்கிவாங்க” என்றாள்.

மறுபடியும் ரேடியோவை ஆன் பண்ணினான் அதுவும் அதே மாதிரி ஒலித்தது.

  • - * தேவிக்கு T. V- இல் பேச வேண்டும் என்று ஆசை

‘சிந்தனைக் கதிர்’ இதற்கு அழைப்பு வந்தது. இதற்கு எந்த டெஸ்ட்டும் இல்லை; அதனால் சான்சு கிடைத்தது .

கணவன்மார்கள் மடையனாக இருந்தாலும் சரி; அடி முட்டாளாகவும் இருக்கலாம். எப்படிப்பட்டவரையும் நாம் வழிக்கும் கொண்டுவர முடியும். சமையல் வேலை தெரியாவிட்டாலும் கற்றுக் கொடுத்துவிடலாம். கணவன் முட்டாளாக இருந்தால் தான் பெண் அதிகாரம் செலுத்த முடியும். எந்த வகையிலும் ஆண் நம்மை வி,