பக்கம்:நாகப்பட்டினம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாகபட்டினம்

அமைத்து ஊஞ்சல் பெட்டியில் தாயும் நான்காவது சேயும் வைக்கப்பட்டனர். தாயின் கீழ் தாயின் நிழலில் மூன்று குழந்தை களும் நீடுதுயில் கொள்வதாகக் கொள்ளலாம். - இக்கல்லறைக் கல்வெட்டு ஆலந்து அம்மையாரின் அவல வரலாறுதான்; துன்பியல் பதிவுதான். ஆயினும், இதனால் ஒரு வரலாற்றுக் குறிப்பு கிடைத்துள்ளது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்புப் படம் உள்ளது' -

1705லும் அதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆலந்து நாட்டாரின் ஆளுநராக சர் சோன்சு வான் ஃச்டிலண்டு நாகையில் அமர்ந்து ஆண்டுள்ளார்; அவரே கீழைக் கடற்கரைப் பகுதியில் ஆலந்தாரின் இயக்குநராக இருந்துள்ளார் என அறிய முடிகிறது.

அவரது ஆளுகைக் காலச் சின்னமாகவும் நாகையில் குறிப்பிடத்தக்க ஒரு சின்னமாகவும் இக்கல்லறை மண்டபம் விளங்கு கின்றது. ஒல்லாந்தர்

இங்கு ஆலந்துக்காரர் - டச்சுக்காரர் என்பது பற்றி ஒன்றை விளக்கிடவேண்டும்.

ஐரோப்பாவில் செர்மனிக்குக் கிழக்கிலும், பெல்சியத்திற்கு வடக்கிலும் அமைந்தது நெதர்லாந்து (NetherLand).இஃதே ஆலந்து (Holand) என்று வழங்கப்படும். மேற்கு செர்மனியில் பிராங்கோயன் என்றோர் இனமக்கள் இருந்தனர். இம்மக்கள் செர்மனியின்மேற்கு வட்ட மொழியாகப் பெசியது டச்சு மொழி எனப்படும். இம்மக்களின் கிளர்ச்சியால் 1581இல் ஆலந்தில் டச்சு மொழி பேசுவோரின் டச்சு அரசு ஏற்பட்டது. அவ்வரசின் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தாரே டச்சுக்காரர். ஆயினர். ஆலந்துக்காரர்' என்பதும் அவரைக் தறிப்பதாகும். ஆலந்துக்காரர் ஒல்லாந்தர்' என்று மக்களால் வழங்கப்பெற்றனர்.

இலங்கையிலும், நாகையிலும் இவரை ஒல்லாந்தர்' என்றே குறித்தனர். நாகையில் இக்காலத்தில் நாட்டப்பட்டுள்ள நிறை தமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் சிலை நோக்கியுள்ள கிழக்கே

1. இம்மொழிபெயர்ப்பைப் பெற்று உதவியவர் கும்பகோணம் திரு இரா. தியாகராசன் அவர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/126&oldid=585008" இலிருந்து மீள்விக்கப்பட்டது