பக்கம்:நாகப்பட்டினம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 131

உன்ன இறங்கும் துறையில் இறங்கி நீராடிய மகளிர் என்பதில்

ஆற்றில் நீர் உண்ணுவதற்காக இறங்கும் துறை நீர் உண்துறை அதில் இறங்கி நீராடினர் மகளிர் என்பனவற்றால் நீர்ப்பெயற் றாம் பழம் நாகையில் ஆறு ஓடிய செய்தியை முதன்முதலில் காண்கிறோம். புனலாடு மகளிர் என்னும் தொடர் ஆற்றில் நீராடுவதைக் குறிக்கும். இதனை ஐங்குறுநூற்றுப் பாடலும் (100-1) சொல்லும்.

மகளிர் - அவரிலும் விளையாடும் இளம் பெண்கள் நீராடினர் என்றால் அந்த ஆறு ஊர்க்குள் ஒடியதை உணரலாம்.

உருத்திரங்கண்ணனார்வண்ணனையைத் தொடர்கிறார்: நீராட இறங்கும் முன் பெண்கள் தம் காதணிகளைக் கழற்றிக் கரையில் போட்டனர். காதணியின் ஒளியைக் கண்ட மீன்கொத்திப் பறவை ஒன்று அதைத் தன் இரை என்று கருதி அலகால் கல்விப் பறந்து போய் உயர்த்திக் கட்டப்பட்டிருந்த தூணின் மேலே அமர்ந்து வைத்தது. அத்துாண் பார்ப்பனர் வேள்வி செய்வதற்காக நாட்டிய வேள்வித் துண். தூண் நாட்டி வேள்வி செய்கின்ற அந்தனர் இருப்பிடம் உண்டு - என்கிறார். இது கொண்டு ஊருக்குள் பாய்ந்து ஒடிய ஆற்றின் கரையில் பார்ப்பனர் வந்து தங்கி வாழ்ந்து வேள்வி செய்ததை அறிகிறோம். பார்ப்பனரின் அக்கரை அகரமாகிய இஃதே முன்குறித்த பார்ப்பனச் சேரியாக இப்போதும் வழங்கப் படுகின்றது.

எனவே, பெரும்பாணாற்றுப்படையின் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் நாகையில் ஒர் ஆறு ஓடியதை உறுதி யாகக் கொள்ளலாம். ~~

மோகவிச்சேதனி என்னும் நூலில் காவிரி பாயும் நாகை என்றுள்ளது. இந்நூல் ஐந்தாம் நூற்றாண்டின் நூல். இந்நூற் றாண்டிலும் ஆறு ஓடியிருக்கிறது.

தேவாரக் காலத் தொடக்கமாகிய ஆறாம் நூற்றாண்டில் ஆறு குறிக்கப்படாமையால் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிவரை ஆறு ஒடியதாகக் கொள்ளவேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/149&oldid=585031" இலிருந்து மீள்விக்கப்பட்டது