பக்கம்:நாகப்பட்டினம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 133

இவ்வாறாக, நாகை A சிந்தாற்றங்கரை ஊராகத் தோன்றியது; A அது நீர்ப்பெயற்று' என்னும் பெயர் பெற்றது. A அதில் சிந்தாறு மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து, வடக்கில் திரும்பி, சற்றுத் தொலைவில் கிழக்கு நோக்கித் திரும்பிக் கடலில் கலந்தது.

A சிந்தாற்றின் தெற்கில் வயல் வெளிகள் அமைந்தன; மேற்கிலும் அமைந்தன.

A கிழக்கில் கடற்கரை ஓரமாகப் பரதவர் குப்பங்கள் அமைந்தன. A சிந்தாற்றின் வடகரையில் வளமனைகள் அமைய அவற்றின் வடக்கே பரந்த வெட்டவெளியும், அதனை அடுத்து இலந்தை மர மேட்டு நிலமும் இருந்தன. - -

- இவ்வாறு நாகையின் தோற்றக்கால அமைப்பு நேர்ந்தது. தோற்றக் காலம் கி.மு. ஆகும்: இது முதல் கட்ட அமைப்பு. அடுத்த கட்ட அமைப்பு இதே நிலையில் ஒரு சேர்க்கைக் குடியேற்றத்தால் நேர்ந்த அமைப்பாகும்.

இ. பதரி திட்டை அமைப்பு

புகார் நகரம் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் கி.மு. காலக்கட்டத்தில் உருவாகிவிட்டது. அசோகப் பெருமன்னன் தென்னாட்டில் புத்த மதத்தைப் பரப்பியபோது புகாரை நற்களமாகக் கண்டுள்ளான். புத்தத் துறவிகள் நூற்றுக்கணக்கில் அங்கு இடம் பெற்றனர். பல்கிப் பெருகிய புகார்ப் புத்தத் துறவிகள் நெருக்கடி காரணமாகவும், நூல்களை எழுத அமைதியான இடத்தை நாடியும் வேற்றிடம் காண முனைந்தனர். அன்னார்க்குப் புகாரின் தெற்கே யிருந்த நீர்ப்பெயற்று ஊர் தக்க இடமாகப்பட்டது. அங்குள்ள மேட்டு நிலமான இலந்தைக்காடு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு இடம் கொண்டனர். இவ்வாறு ஓர் ஊறுபாட்டாலும் (விபத்தாலும்) நாகை விரிவாக்கப்பட்டது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/151&oldid=585033" இலிருந்து மீள்விக்கப்பட்டது